இந்தியாவில் ரூ. 57,190 விலையில் விற்பனைக்கு வந்த 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்..!!

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய 2018 சூப்பர் ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிளை ரூ. 57,190 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேம்படுத்தப்பட்ட இந்த மாடல் பைக்கில் ஹீரோ நிறுவனம் சொந்தமாக தயாரித்த 124.7சிசி நான்-சிலாப்பர் எஞ்சினை பொருத்தியுள்ளது.

இதே இழுவைத்திறன் பெற்ற எஞ்சினை 2017ம் ஆண்டில் வெளிவந்த கிளாமர் பைக்கிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமாக பங்குகளை ஹீரோ நிறுவனமே தக்கவைத்துள்ளது.

தற்போது விற்பனைக்கு வந்துள்ள 2018 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் 124.7சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 11.2 பிஎச்பி பவர் மற்றும் 11 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

முந்தையை மாடலை விட இந்த மேம்படுத்தப்பட்ட பைக் 1.87 பிஎச்பி பவர் மற்றும் 0.65 என்.எம் டார்க் திறனை கூடுதலாக வெளிப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

பைக்குகளின் கட்டமைப்பு, இயக்கம் நிறுத்தம் ஆகிய செயல்பாடுகளை சிறப்பான வகையில் வழங்க ஹீரோ உருவாக்கிய தொழில்நுட்பம் தான் i3S. இந்த அம்சம் 2018 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

கிளாமர் மாடல் போல இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய மாடலை விட 3 கிலோ எடை அதிகரித்து 124 கிலோ எடையில் 2018 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய எஞ்சின் தேர்வை தாண்டி, இந்த பைக்கிற்கு ஸ்போர்டியர் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கை அதிக இடவசதி மற்றும் சொகுசான பயணத்தை வழங்கும் விதத்தில் உள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

பைக்கின் பக்கவாட்டு பகுதிகளுக்கான பேனல் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதி எல்.இ.டி டெயில் விளக்குகள், அறுங்கோண வடிவிலான அம்சங்களில் காணப்படுகிறது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதுதவிர AHO முறையில் இயங்கும் முகப்பு விளகுகள், பக்கவாட்டு செயல்பாடுகளுக்கான இண்டிகேட்டர், அகலமான பின்பக்க டயர் மற்றும் பெரியளவிலான இருக்கை ஸ்ட்ரோஜ் வசதி மற்றும் பக்கவாட்டு பகுதிக்கான யூட்டிலிட்டி பாக்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் சிறந்த விற்பனை திறனை பெற்று வரும் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கை திருப்திரமான முறையில் மேம்படுத்தியுள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் செயல்திறனில் 27 சதவீத பிஎச்பி பவர் மற்றும் 6 சதவீத அளவில் டார்க் திறன் அதிகரிக்கப்பட்டு இருப்பது நிச்சயம் இந்த பைக்கிற்கு பெரிய சாதகமாக அமையும்.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

தோற்றப்பொலிவு, செயல்திறனை தாண்டி பைக்கின் ஸ்டோரேஜ் வசதி மற்றும் கையாளும் திறனும் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு வெளிவந்திருப்பது 2018 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கிற்கு பெரிய சாதகம் தான்.

English summary
Read in Tamil: 2018 Hero Super Splendor Launched In India; Priced At Rs 57,190. Click for Details...
Story first published: Thursday, March 8, 2018, 10:33 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark