2018 சிபிஆர் 250ஆர் பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது ஹோண்டா..!!

Written By:

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம், புதிய சிபிஆர் 250 ஆர் மோட்டார் சைக்கிளை 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

குவாட்டர்-லிட்டர் ஃபேரிடு மோட்டார் சைக்கிளான இதில் பெரியளவில் தோற்றப்பொலிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

இதன் காரணமாக புதிய சிபிஆர் 250 ஆர் மோட்டார் சைக்கிளில் கிராஃபிக்ஸ், நிறங்கள் மற்றும் முகப்பு விளக்குகள் ஆகியவை புதிய மாற்றங்களை பெற்றுள்ளன.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துவதற்கு முன்பு, இந்த புதிய சிபிஆர் 250 ஆர் பைக், டூயல் முகப்புவிளக்குகள் செட்-அப் கொண்ட தோற்றத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

2017ல் பிஎஸ்4 எஞ்சின் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்ட பிறகு சிபிஆர் 250ஆர் பைக்கை ஹோண்டா தற்காலிமாக நிறுத்தியது.

ஆனால் இந்த பைக்கின் முந்தைய மாடலையே தொடர்ந்து 2018 சிபிஆர் 250 பைக்கில் ஹோண்டா பின்பற்றியுள்ளது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

இது நிச்சயம் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். புதிய தோற்றப்பொலிவில் இந்த பைக்கை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, பழைய மாடலில் 2018 சிபிஆர் 250 பைக் வெளியானது வருத்தம் தான்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

2018 சிபிஆர் 250ஆர் பைக்கில் முற்றிலும் புதிய முகப்பு விளக்குகள் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் அனைத்து வித கட்டமைப்புகளிலும் புதிய கிராஃபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

இதை தாண்டி இந்த பைக்கில் பெரியளவில் மாற்றுப்பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. கூடுதலாக 2018 சிபிஆர் 250 ஆர் பைக் மார்ஸ் ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ரைக்கிங் க்ரீன் நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

முன்னதாக விற்பனையில் இருந்து ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக் பியர்ஸ் ஸ்போர்ட்ஸ் எல்லோ, ஸ்போர்ட் ரெட் ஆகிய நிற தேர்வுகளோடு இந்த பைக்கின் சிறப்பு எடிசன் ரெஸ்போல் ஹோண்டா பெயின்ட் ஸ்கீமிலும் இந்த பைக் கிடைக்கிறது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

249.66 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விடு கூல்டு எஞ்சின் பெற்றுள்ள இந்த பைக் 26 பிஎச்பி பவர் மற்றும் 22.9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

6 ஸ்பீடு கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த பைக், செயல்திறன் மற்றும் தோற்றப்பொலிவில் பெரும்பாலும் தற்போதைய மாடலையே சார்ந்திருக்கிறது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

2018 சிபிஆர் 250 ஆர் பைக்கில் முன் சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் ரியர் பகுதியில் ப்ரோ-லிங் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப்பும் அமைந்துள்ளது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

பிரேக்கிங் தேவைகளுக்கான முன்பக்க 296 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின் சக்கரம் 220 மிமீ டிஸ்க் பிரேக்கை பெற்றுள்ளது. ஏபிஸ் அம்சமும் இந்த பைக்கில் உள்ளது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

2018 ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள தோற்றப்பொலிவு அதன் முன்புறத்தில் தான் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2018 சிபிஆர் 250 ஆர் பைக்: டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு..!!

தோற்றப்பொலிவை தவிர, இதனுடைய செயல்திறனில் எந்த புதுமையான அம்சமும் இல்லை. 2018 ஜூனில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் 2018 சிபிஆர் 250ஆர் பைக்கிற்கு ரூ. 2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

English summary
Read in Tamil: New Honda CBR 250R Unveiled - Expected Launch, Price, Specifications & Images. Click for Details...
Story first published: Friday, February 9, 2018, 10:54 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark