புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாகனங்களில் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டது.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

விற்பனை நிறுத்தப்பட்டு ஓர் ஆண்டு ஆகும் நிலையில், பிஎஸ்-4 எஞ்சினுடன் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் பாரத் ஸ்டேஜ்- 4 மாசு உமிழ்வு தரம் கொண்ட 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.5 பிஎச்பி பவரையும், 22.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மணிக்கு 135 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 110மிமீ ட்யூப்லெஸ் டயரும், பின்சக்கரத்தில் 140மிமீ ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 296மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவை புதிய அம்சங்களாக இருக்கின்றன. மற்றபடி, டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் சம்பல் மற்றும் சிவப்பு வண்ணக் கலவை, சாம்பல் மற்றும் ஆரஞ்ச் வண்ணக் கலவை மற்றும் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணக் கலவை ஆகிய மூன்று புதிய வண்ணக் கலவையில் வந்துள்ளது.

 புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாடல் ரூ.1.93 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

English summary
The new Honda CBR250R has been launched in India, priced at Rs 1.64 and Rs 1.93 Lakh for the standard and the ABS version, both prices ex-showroom (Delhi). The 2018 version of the motorcycle was first unveiled at the Auto Expo held earlier this year.
Story first published: Tuesday, April 3, 2018, 11:32 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark