புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

Written By:

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தமாக 17 விதமான புதிய இருசக்கர வாகனங்களை சுஸுகி அறிமுகம் செய்கிறது.

ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் என இருவேறு வாகன பிரிவுகளில் சுஸுகியின் புதிய தயாரிப்புகள் வெளிவருகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

அதில் புர்க்மன் ஸ்டீரிட் ஸ்கூட்டர், கம்பிளிட்டி புல்டு யூனிட் (சிபியூ), இந்தியாவிற்கான சுஸுகியின் தயாரிப்புகள், டர்ட் பைக்ஸ் மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் ஆர் , சுஸுகி மோட்டோ ஜிபி ஆகிய பைக்குகள் அடக்கம்.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

இதுதவிர வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்.டி மற்றும் புதிய புர்க்மன் ஸ்கூட்டர் என மேலும் இரண்டு இருசக்கர மாடல்களை சுஸுகி எக்ஸ்போவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

இந்தியாவிற்காக சுஸுகி கொண்டு வரும் பைக் மாடல்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள் இன்ட்ரூடர் 155.

க்ரூஸர் வகை மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள இன்ட்ரூடர் 155, 2018 ஆட்டோ எக்ஸ்போவின் பெரிய எதிர்பார்ப்பை பெற்ற பைக்.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

புர்க்மன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் பற்றிய எந்த தகவல்களையும் இதுவரை சுஸுகி வெளியிடவில்லை. எனினும் அதில் ஆக்சஸ் 125 மாடலில் உள்ள அதே செயல்திறன் இந்த மாடலில் இடம்பெறலாம் என தெரிகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

கூடவே அப்ரிலியா எஸ்.ஆர் 150 மற்றும் வெஸ்பா 150 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக புர்க்மன் ஸ்கூட்டர் மாடலை சுஸுகி 150சிசி திறனில் வெளியிடலாம் என்றும் தகவல்கள் கிடைக்கபெறுகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் 2ம் அரங்கத்தில் சுஸுகி தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இங்கு இந்தியாவிற்கான தயாரிப்புகள் மற்றும் சர்வதேச சந்தைக்கான மாடல்கள் என இரண்டுமே இடம்பெறும்.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

கூடுதலாக ஜிக்ஸர் கப் ரேஸ் பைக் மற்றும் 2018 சுஸுகி ஆர்.எம்- இசட் 450, 2018 சுஸுகி ஆர்.எம்- இசட் 250, 2018 சுஸுகி டி.ஆர்-270 போன்ற மோட்டார்கிராஸ் வேரியன்டுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

இந்தியாவிற்கான லைன்-அப்பில் சுஸுகி ஏக்சஸ், சுஸுகி ஜிக்ஸர் 155 மற்றும் இன்ட்ரூடர் ஆகிய மாடல்களை அரங்கத்தில் இடம்பெற செய்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

இந்தியா 2018 ஆட்டோ எக்ஸ்போ குறித்து பேசிய சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சதோஷி உச்சிதா, இந்தாண்டில் ஒரு பெரிய வெற்றியை காண சுஸுகி எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களுடன், புதிய வரவு தயாரிப்புகளும் இணைந்து 2020ம் ஆண்டில் ஒரு மில்லியன் வாகன விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற சுஸுகியின் கனவை நிறைவேற்றும் என்று சதோஷி உச்சிதா தெரிவித்தார்.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

சுஸுகியின் புதிய தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் என்றுமே பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது க்ரூஸர், அட்வென்ச்சர் டூரர் என அந்நிறுவனம் வெளியிடும் வாகனங்களும் பெரிய எதிர்பார்ப்பை வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் 17 புதிய வாகனங்களை களமிறக்கும் சுஸுகி..!!

விரைவில் நடைபெறவுள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய வெளியீட்டிற்கு பிறகான உடனடி தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழுடன்.

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Read in Tamil: Auto Expo 2018 Suzuki's Exciting Lineup Of Bikes & Scooter For India's Auto Show. Click for Details...
Story first published: Tuesday, January 30, 2018, 12:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark