சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

இருசக்கர வாகன உலகில் தனக்கென தனிப்பட்ட செயல் திறனை கொண்டு முத்திரை பதித்து வரும் சுசூகி நிறுவனம் தனது புதிய சுசூகி வி- ஸ்ட்ரோம் 650 (SUZUKI V STORM 650) என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாய் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுசூகி பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

மேலும் இதன் முன்பதிவுகள் சுசூகி நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றன. இந்த இளரக வாகனமான சுசூகி V ஸ்டார்ம் 650 முன்னணி ஆட்டோமொபைல் வலைதளத்தால் அடுத்த மாதம் வெளிவரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

இந்த வாகனத்தை முன்பதிவு செய்ய விரும்புவோர் வெறும் 50,000 ருபாய் மட்டுமே செலுத்தி உங்களுக்கான பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இதன் ஆரம்பவில்லை எப்படியும் ஏழு லட்சத்தை எட்டும் என்று அந்நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

இந்த வாகனத்தின் போட்டியான கவாசகி வெர்ஸிஸ் 650 (KAWASAKI VERSYS 650) வாகனத்தை விட குறைந்தது என்பதால் அதனை மிஞ்சிய விற்பனை பெரும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை. GSX S750 மற்றும் ஹயபுஸா சூப்பர் பைக்குகளை தொடர்ந்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கும் மூன்றாவது உயர்ரக சுஸுகி பைக் இதுவாகும்.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

உலகெங்கும் உள்ள சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை நிலையங்களில் இந்த வாகனம் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது அவை ஸ்டாண்டர்ட் மற்றும் XT . ஸ்டாண்டர்ட் வாகனமானது சாதாரண பயணத்திற்கும் , சாலைகளுக்கும் ஏற்ற வடிவம், செயல் திறன் பெற்றிருக்கும், XT வாகனம், ஆப் ரோடு எனப்படும் சாகசங்கள், பந்தயங்கள் போன்றவற்றிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

உங்கள் முன்பதிவினை நீங்கள் ஸ்டாண்டர்ட் வாகனத்திற்கு மட்டுமே பெறலாம் என்பது சற்றே கவலைக்கு உரிய விஷயம். இந்த வாகனம் இதன் உடன்பிறப்பான V ஸ்ட்ரோம் 1000 (V STORM 1000) கட்டுமான தொழில்நுட்பத்தை சார்ந்தே இது இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

MOST READ : வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

இந்த சுசூகி V ஸ்ட்ரோம் 645சிசி எஞ்சின் அதிகபட்சமா 70 பிஎச்பி செயல் திறனையும், 62 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைதூர பயணத்திற்கென்ற உருவாக்கப்பட்ட 6 ஸ்பீட் கியர் பாக்ஸ், இதன் பயணத்தை மேம்படுத்தும் பொருட்டு உள்ளது.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

பிரிட்ஜ்ஸ்டோன் பட்லக்ஸ் (BRIDGESTONE BATTLAX A40) A40 என்ற டயர் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அச்சுகளை கணக்கில் கொள்ளும் பொது மற்றவைவிட மிகவும் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாய் உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லிய கயிறு போல் இருக்கும் ஒயர் ஸ்போக்கினால் (WIRE SPOKE) இதன் சக்கரங்கள் தனித்துவம் பெற்றுள்ளன.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கமும் , மோனோஷாக் சஸ்பென்ஷன் பின் பக்கமும் அமையப்பெற்றிப்பது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் பின் பக்க சஸ்பென்ஷன் ஐ நமது எடை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைக்கும் தகுதியும் , ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது அடுத்த யுகத்தின் வாகனம் போன்ற நம்பிக்கையை அளிக்கிறது.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

வாகனபாதுகாப்பை பொறுத்த வரை இருபுறம் ABS பிரேக் தொழில்நுட்பம்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. 310MM இரட்டை முன்பக்க டிஸ்க்கும் 260MM பின் பக்க டிஸ்க்கும் வலுசேர்க்கின்றன.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

பொதுவான தொழில்நுட்பங்கள் சிறப்பம்சங்கள் யாதெனில், மூன்று வெவ்வேறு உயரத்தில் முன்பக்க விண்ட்ஷ்கிரீனை (WINDSCREEN) மாற்றியமைத்து கொள்ளலாம், பாதுகாப்பை மேம்படுத்தும் ட்ராக்ஷன் (TRACTION CONTROL) கண்ட்ரோல், எளிதில் ஸ்டார்ட் செய்ய கூடிய தொழில்நுட்பங்கள், முற்றிலும் மேம்பட்ட (ELECTRONIC INSTRUMENT CLUSTER) எலக்ட்ரானிக் தகவல் பலகை ஆகும். இந்த எலக்ட்ரானிக் தகவல் பலகை V ஸ்ட்ரோம் 1000 இடம் இருந்து பெறப்பட்டது.

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து:

இந்த சுசூகி V ஸ்ட்ரோம் 650வாகனமானது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதால் இதன் பெயர் ஓங்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இது GSX750 வாகனத்திற்கு அடுத்தபடியே நிற்கும் இலரக வாகனம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்திய சந்தையில் இறங்கிய அடுத்த நொடியே இதன் போட்டியான கவாசகி வெர்ஸிஸ் (KAWASAKI VERSYS) வாகனத்தை பின்னுக்கு தள்ளுமோ என்ற அச்சம் அவர்கள் மனதில் இப்போதே புதையுண்டு கொண்டது.

MOST READ :புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

Most Read Articles

Tamil
English summary
Suzuki Motorcycles is expected to launch the new 2018 V-Strom 650 in India. The motorcycle was first showcased at the 2018 Auto Expo. The new Suzuki V-Strom 650 will be launched in India sometime around August this year.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more