புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை கிளறி இருக்கும் புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கை வாங்க காத்திருக்கும் இளைஞர்களுக்காக கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற யமஹா ஆர்15 பைக் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட யமஹா ஆர்15 பைக் வி 3 என்ற மாடலாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள யமஹா டீலர்களில் புதிய யமஹா ஆர்15 வி3 மாடலுக்கான முன்பதிவு ரகசியகமாக நடந்து வருவதாக ரஷ்லேன் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்ததுடன் டீலர்களில் முன்பதிவு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய யமஹா ஆர்15 பைக் ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், வெளிநாட்டு மாடலில் இருக்கும் சில விலை உயர்ந்த ஆக்சஸெரீகள் மற்றும் தொழில்நுட்பங்களை குறைத்து இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

யமஹா ஆர்15 வி3 மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுக்கு பதிலாக சாதாரண டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அதேபோன்று, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்திய மாடலில் இடம்பெற்றிருக்காது.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

வெளிநாடுகளில் ஐஆர்சி டயர்களுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் புதிய யமஹா ஆர்15 வி3 மாடல் இந்தியாவில் எம்ஆர்எஃப் டயர்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இந்தியாவில் இருக்காது. முன்புற ஃபென்டர் மற்றும் ஃபுட்பெக்குகள் வி2 மாடலில் இருப்பவற்றையே யமஹா இந்தியாவில் கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கில் ஒரு சிலிண்டர் கொண்ட 155.1சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்ட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும் 14.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. 137 கிலோ எடை கொண்டது. எல்இடி ஹெட்லைட்டுகள் யமஹா ஆர்15 வி3 பைக்கின் மிக முக்கிய சிறப்பம்சம். இந்த புதிய மாடலில் தரையிலிருந்து இருக்கையின் உயரம் சற்று அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கையாளுமை மேம்பட்டு இருப்பதாக யமஹா கூறுகிறது.

புதிய யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கான முன்பதிவு துவக்கம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

வெளிநாடுகளில் இந்திய மதிப்புபடி, ரூ.1.70 லட்சம் விலையில் புதிய யமஹா ஆர்15 வி3 பைக் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரூ.1.2 லட்சம் மமுதல் ரூ.1.30 லட்சம் இடையிலான விலையில் வரும் என்று தெரிகிறது. அடுத்த ஓரிரு வாரத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #யமஹா #yamaha
English summary
Rushlane has reported that the new Yamaha R15 V3 bookings have opened in India and the launch is expected in February 2018.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark