புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

இருசக்கர வாகன தயாரிப்பில் இளைஞர்களை வெகுவாக கவரும் யமஹா நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பான யமஹா YZF - R25 என்ற வாகனத்தை நவம்பரில் அறிமுகப்படுத்த உள்ளதை அறிவித்துள்ளது.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

2018 இல் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள இருசக்கர வாகன கண்காட்சியில், புதிய YZF - R25 மற்றும் யமஹா YZF - R3 பைக்குகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இரண்டுமே ஒரே வெளிப்புற தோற்றத்தை பெற்றுள்ளது. இருப்பினும் YZF - R3 பைக் முதலில், நவம்பரில் வெளிவரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

முன்பக்க தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க திட்டமிட்ட யமஹா சற்று வென்றுள்ளது என்று தான் கூறவேண்டும். கூரான முன் பகுதி, சரிந்த முன் விளக்குகள் இவை அனைத்தும் யமஹா R15 ஐ நினைவு படுத்தினாலும் சற்று அங்கங்கே மாற்றங்கள் தெரிகின்றன . இரண்டு மாடல்களிலுமே எல்இடி ஹெட்லைட்டுகள் முக்கிய அம்சமாக இடம்பெறுகின்றது.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

இந்த இரண்டு வாகனமும் தொழிற்நுட்பத்தை புரட்டி போடும் வகையில் இதன் முன்பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய யமஹா R3 பைக்கில் சாதாரண டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள்தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவே நமது சாலைகளுக்கு ஏற்றவை என்பதே இந்த கட்டுமானத்தின் காரணி.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

உதாரணமாக R15 V 3 .0 எடுத்துக்கொள்ளுங்கள் அதை சார்ந்தே இதுவும் இருக்கும். விலையை குறைப்பதும் இதன் நோக்கம் என கூறலாம். கூட்டி கழித்து பார்க்கையில் யமஹா R15 V 3 .0 சகோதரன் என பொதுவாக கூறிவிடலாம் இந்த புதிய படைப்பை.

MOST READ: லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

இதனை தவிர்த்து பெரியதாய் கூறுமளவிற்கு எந்த வித மாற்றமும் இவ்விருவாகனத்தில் செய்யப்படவில்லை. கிளிப் ஆன் ஹாண்டில் பார், ஸ்பிளிட் இருக்கைகள், இரண்டு புகை போக்கிகள், சரிந்த முன் விளக்குகள், சிவப்பு பின் விளக்குகள் போன்றவை திருப்திகரமாய் இருக்கின்றன. இருப்பினும் முன்பக்கத்தை சற்று வேலைப்பாடுகளுடன் இந்த R3 வாகனத்திற்கு ஒரு புதிய அழகை ஊட்டி இருக்கலாம் என்று யமஹா நிறுவனத்திற்கு அறிவுரை கூற மனம் ஏங்குகிறது.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

இந்த யமஹா R25 பைக்கில் , 249 CC லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. பேரலல் ட்வின் என்ஜின் கொண்ட இந்த பைக் 35BHP பவரையும், 22 .6 NM டார்க் திறையும் வழங்கும். இதற்கு ஒத்த R3 வாகனத்தை அலசுகையியல் இது 321CC லிக்யூடு கூல்டு என்ஜினுடன் வியக்க வைக்கிறது. மேற்குறிய பேரலல் ட்வின் என்ஜின் 41.4 BHP பவரையும், 29.6NM டார்க் திறனையும் வழங்கும்.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

இந்த இரண்டு யமஹா வாகனமும் 6 ஸ்பீட் கியர் பாக்சினால் செறிவூட்ட பட்டு பறக்க வல்லதாய் உள்ளது. வெளியான அறிக்கைகளில் இந்த இருவாகனமும் VVA எனப்படும் வேரியபுள் வால்வு அக்சுவேட்டர் (VARIABLE VALVE ACTUATOR) தொழில்நுட்பத்தில் உண்டான கிளட்ச் பாகங்களில் இயங்குகிறது. மற்ற உதிரிகள் அனைத்தும் பழமை மாறாமல் அருமையாய் உள்ளன.

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

சிறந்த செயல் திறன் கொண்ட வாகனங்களில் இளைஞர்களை கவரும் யமஹா இந்த இரு படைப்புகளில் வெற்றிபெறும் என்பது உறுதிதான். மேலும் இவை புதிய வர்ணங்களில் ABS தொழில்நுட்பத்தில் இயங்கும் பிரேக்குகளுடன் 2018 இந்தியாவில் களமிறக்க இருக்கின்றன.

MOST READ: பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

தனிப்பட்ட மாற்றங்களுடன் ஆன சிறப்பு வாகனங்களையும் இந்த நிறுவனம் வெளிக்கொணர உள்ளது கூடுதல் மகிழ்ச்சி. கவாஸாகி நிஞ்ஜா 300 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RR 310 போன்ற வாகனங்களின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டது யமஹா YZF R25 மற்றும் R3.

Most Read Articles

ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிள்களின் படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மீதான கோபத்தால், பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிள்களை தற்போது அதன் உரிமையாளர்கள் குப்பையில் வீச தொடங்கியுள்ளனர். இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Tamil
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha is all set to unveil the new YZF-R25 by November 2018. According to emerging reports, the new Yamaha YZF-R25 will be revealed at the 2018 Indonesia Motorcycle Show. The Yamaha YZF-R25 and the YZF-R3 share the same design and we will get the first glimpse of the new R3 in November 2018.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more