ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி பைக் மாடல்களின் முக்கிய விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் 1,165மிமீ உயரமும், 744மிமீ அகலமும், 202 கிலோ எடையும் கெ

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி பைக் மாடல்களின் முக்கிய விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த இரண்டு மாடல்களில் இன்டர்செப்ட்டார் 650 மாடல் வாடிக்கையாளர் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் கஃபே ரேஸர் என்ற ஸ்டைலிலும், இன்டர்செப்ட்டார் 650 பழைய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் வடிவமைப்பிலும் வர இருக்கின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு புதிய சக்திவாய்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. ராயல் என்ஃபீல்டு.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் 2,122 மிமீ நீளமும், 1,400மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கின்றன. 804மிமீ அளவுக்கு இருக்கை உயரத்தை பெற்றிருக்கிறது. இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் 1,165மிமீ உயரமும், 744மிமீ அகலமும், 202 கிலோ எடையும் கொண்டது. கான்டினென்டல் ஜிடி 650 மாடல் 1,024மிமீ உயரமும், 789மிமீ அகலமும், 198 கிலோ எடையுடையதாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிளில் 13.7 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்கும், கான்டினென்டல் ஜிடி 650 மாடலில் 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுமே டபுள் கிராடில் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் 110மிமீ வரை நகரும் அமைப்புடைய 41 மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 87.5 மிமீ வரை நகரும் அமைப்புடைய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பபட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இரட்டையர்களாக பாவிக்கப்படும் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலுமே இணையான இரண்டு சிலிண்டர்களை கொண்ட 648 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளலிப்படுத்தும். மிக முக்கியமாக ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 250மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. பாஷ் நிறுவனத்தின் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களும், வரும் செப்டம்பர் மாதம் 22 மற்றும் 26ம் தேதிகளுக்கு இடையே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் இடையிலான விலையில் இந்த மோட்டார்சைக்கிள்கள் எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவான 650சிசி மாடல்களாக இருக்கும்.

Most Read Articles
English summary
Royal Enfield 650 Twins specs leaked Ahead Of Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X