ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்கள் ரூ.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சின் சிசி மற்றும் விலை அடிப்படையில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சை

ராயல் என்ஃஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த 650 மோட்டார்சைக்கிள்களின் ஐரோப்பிய விலை விபரம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விலை குறித்த எமக்கு கிடைத்திருக்கும் தகவலை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு மாடல்களும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 6,200 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.5.16 லட்சம்) விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் 6,400 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.5.33 லட்சம்) விலையிலும் விற்பனைக்கு செல்கின்றன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

பிற ஐரோப்பிய நாடுகளில் இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள் 6,400 யூரோ விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் 6,600 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.5.49 லட்சம்) விலையிலும் செல்ல இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

இந்த நிலையில், வரும் 14ந் தேதி இந்த இரு புதிய மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய 650சிசி மாடல்கள் ரூ.4 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்தியாவில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சிசி திறன் கொண்ட எஞ்சின் ரகத்தில் குறைவான விலை மாடல்களாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள், கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் மாடல்களில் 649சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

இரண்டு மோட்டார்சைக்கிள்களிலுமே முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு வரும் 14ந் தேதி முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்துடன் புக்கிங் துவங்கப்பட இருக்கிறது. ஜனவரியில் டெலிவிரி துவங்கப்படும் என்று எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் எதிர்பார்க்கும் விலை இதுதான்!

எஞ்சின் சிசி மற்றும் விலை அடிப்படையில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுடன் போட்டிபோடும். எனினும், தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்களும் உருவாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The Royal Enfield Interceptor 650 and Continental GT 650 are expected to come with a price tag of around Rs 4 lakh, ex-showroom in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X