ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் எஞ்சின் சிசி அடிப்படையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போட்டாலும், விலை மிக சவாலானதாக வந்துள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக குறிப்பிடப்படும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களும் நேற்று முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சில 400சிசி ரக மோட்டார்சைக்கிள்களின் விலையில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்கள் வந்திருப்பது ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் உள்ள முக்கிய சிறப்பம்சங்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

டிசைன் வித்தியாசம்

ராயல் எஃபீல்டு கான்டினென்டல் 650 ஜிடி மாடலானது ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடலின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. ஆனால், புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் இப்போது விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைனிலும், வித்தியாசமான ரகத்திலும் வந்துள்ளது ராயல் என்ஃபீல்டு பிரியர்களை சுண்டி இழுத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மாடலானது இங்கிலாந்தில் புகழ்பெற்ற கஃபே ரேஸர் என்ற பாரம்பரிய ரக வடிவமைப்பில் வந்துள்ளது. உண்மையான ஜிடி 250 மாடலின் டிசைன் தாத்பரியங்களை கொண்டு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. க்ளிப் ஆன் ஹேண்டில்பார், தனித்துவமான பெட்ரோல் டேங்க், ஒற்றை இருக்கை, பின்னோக்கி அமைக்கப்பட்ட கால் வைப்பதற்கான ஃபுட் பெக் அமைப்பு ஆகியவை கஃபே ரேஸர் லட்சணத்தை கொடுக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலானது 1960களில் இங்கிலாந்து சாலைகளை கலக்கிய ரோட்ஸ்டெர் வடிவமைப்பை பெற்றிருக்கிறது. உயர்த்தப்பட்ட அமைப்பில் ஹேண்டில்பார், கண்ணீர் துளி போன்ற பெட்ரோல் டேங்க் அமைப்பு, வைரக்கற்கள் போன்ற தையல் வேலைப்பாட்டுடன் கூடிய தடிமன் குறைவான மெல்லிய இருக்கை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

புதிய எஞ்சின்

இந்த இரண்டு புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்களிலுமே 650சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் மிக சீரான பவர் டெலிவிரியையும், அதிர்வுகள் குறைவான அனுபவத்தையும் தரும் என்பது முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

இந்த எஞ்சினில் சிலிண்டருக்கு தலா 4 வால்வுகளும், கவுண்ட்டர் பேலன்ஸ்டு கிராங்க்சாஃப்ட் அமைப்பு 270 டிகிரி கோணத்தில் எரியூட்டும் விதத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிர்வுகள் மிக குறைவாகவும், அதிக செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை தரும் விதத்தில் இருக்கிறது..

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

புதிய டிரான்ஸ்மிஷன்

இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களிலும் புதிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரேஸ் டிராக், சாதாரண சாலைகள் மற்றும் மலைப்பாங்கான சாலைகள் என அனைத்து விதமான சாலை நிலைகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளிலும் வைத்து இந்த கியர்பாக்ஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

முக்கிய அம்சங்கள்

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களில் டியூவல் பேரல் புகைப்போக்கி குழாய், 18 அங்குல அலாய் வீல்கள் மற்றும் பைரெல்லி ஃபான்டம் ஸ்போர்ட்காம்ப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரெம்போ நிறுவனத்தின் பைப்ரே டிஸ்க் பிரேக்குகள் மற்றும் இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

சவாலான விலை

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் எஞ்சின் சிசி அடிப்படையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போட்டாலும், விலை மிக சவாலானதாக வந்துள்ளது. அதாவது, 400சிசி ரக மோட்டார்சைக்கிள்களுக்கும் போட்டி தரும் விலையில் வந்திருப்பது ராயல் என்ஃபீல்டு பிரியர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

விலை நிர்ணய உத்தி

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் கர்நாடகா மற்றும் கேரளாவில் ரூ.2.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பிற மாநிலங்களில் ரூ.2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் 650 ஜிடி மோட்டார்சைக்கிள் ரூ.2.49 லட்சத்திலும் கிடைக்கும். அதிக வரிவிதிக்கும் மாநிலங்களில் இந்த பைக்குகளின் ஆன்ரோடு விலை ரூ.3 லட்சத்தில் இருக்கும் விதத்தில், இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் எக்ஸ்ஷோரூம் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்டு சிஇஓ சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முக்கிய சிறப்பம்சங்கள்: சிறப்புத் தொகுப்பு

டெலிவிரி பணிகள்

நாடு முழுவதும் உள்ள 120 ராயல் என்ஃபீல்டு டீலர்களில் இந்த இரண்டு புதிய மாடல்களுக்கும் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ஆன்லைனிலும் புக்கிங் செய்ய முடியும். வரும் ஜனவரியிலிருந்து நாட்டின் அனைத்து பகுதியிலுள்ள டீலர்களிலும் இந்த புதிய மாடல்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று ராயல் என்ஃபீல்டு தெரிகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield 650cc Twins Top Features: Engine, Slipper Clutch, ABS & More.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X