ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட புல்லட் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார்பிளாக்இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளில்

By Saravana Rajan

இந்தியாவில் விற்பனையாகும் 125சிசி திறனுக்கும் மேல்பட்ட ரக இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்க இருக்கிறது.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட புல்லட் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார்பிளாக்இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

அதாவது, ஒரு சக்கரத்திற்கு மட்டுமே ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டால் அது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என்று குறிப்பிடப்படுகிறது. அதன்படி, ராயல் என்ஃபீலடு புல்லட் மோட்டார்சைக்கிளின் முன்சக்கரத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மற்றும் 500சிசி மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வர இருக்கும் முதல் மாடல் என்ற பெருமையையும் புல்லட் மாடல்கள் பெற இருக்கின்றன.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

அதிக எடை கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் பிரேக் சிஸ்டம் என்பது எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை என்ற குறை வாடிக்கையாளர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ஆனால், குறைந்தபட்சம் ஒரு சக்கரத்திற்காவது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுவது வரவேற்கத்தக்க விஷயமே. இதன்மூலமாக, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் பிரேக் செயல்திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டால் விலை அதிக அளவு ஏற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே, விலையை கட்டுக்குள் வைப்பதற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், விலையிலும் பெரிய அளவில் ஏற்றம் இருக்காது என்று கருதலாம்.

 ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று, விரைவில் வர இருக்கும் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்களிலும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
From April 1, 2018, it is mandatory for all two-wheelers above 125cc to be equipped with ABS. Now, CarBlogIndia reports that Royal Enfield Bullet will be the first motorcycle to get ABS as a standard feature.
Story first published: Sunday, April 1, 2018, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X