ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

ராயல் என்ஃபீ்ல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

வரும் 2019 ஏப்ரல் மாதம் முதல் 125சிசி ரகத்திற்கு மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதனை கருதி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் வசதியை அளிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

அண்மையில், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனில் முதல்முறையாக ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் வந்தது. இந்த நிலையில், கிளாசிக் 350 மாடலின் பிற வேரியண்ட்டுகளிலும் இப்போது ஏபிஎஸ் பிரேக் வசதியை அளிக்க துவங்கி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

அந்த விதத்தில், தற்போது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் கன் மெட்டல் கிரே எடிசன் மாடலிலும் டூயல் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு சக்கரங்களுமான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

இந்த கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசனில் முன்சக்கரத்தில் டியூவல் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கிறது.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

இந்த மாடலுக்கு ரூ.1.80 லட்சம் ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண கிளாசிக் 350 கன் மெட்டல் மாடலைவிட ரூ.10,000 கூடுதல் விலையில் இந்த ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசன் மாடலில் இருக்கும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் மத்தியில் தனித்துவமான தேர்வாக இருக்கும் இந்த கன் மெட்டல் மாடலில் ஏபிஎஸ் வசதி அளிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க தேர்வாக மாற்றி இருக்கிறது.

Most Read Articles

English summary
Royal Enfield Classic 350 Gun Metal Grey has launched with Anit locking braking system at a price of Rs. 1.80 lakh (on-road) in India.
Story first published: Monday, October 29, 2018, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X