ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் மாடலின் விலை விபரம் கசிந்துள்ளது. கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.2.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் மாடலின் விலை விபரம் கசிந்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் கிளாசிக் 350 மாடல்களில் ஏபிஎஸ் வசதியை அறிமுகம் செய்தது. ஹிமாலயன் மோட்டார்சைக்கிளிலும் ஏபிஎஸ் வசதியுடன் களமிறக்கியது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

இந்த நிலையில், அடுத்து கிளாசிக் 500 மாடலில் ஏபிஎஸ் வசதியை சேர்த்துள்ளது. கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஸ்டீல்த் பிளாக் மற்றும் டெசர்ட் ஸ்டோர்ம் ஆகிய இரண்டு வண்ணங்களில் ஏபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.2.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. சாதாரண ஸ்டான்டர்டு மாடலைவிட ஏபிஎஸ் மாடல் ரூ.20,000 முதல் ரூ.30,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

மேலும், கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் நாடுமுழுவதும் உள்ள ராயல் என்ஃபீல்டு டீலர்களில் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 மாடலில் பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 499சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதுடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட ஏபிஎஸ் மாடலின் பின்சக்கரத்தில் பெரிய டிஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நிறைவையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது நிச்சயம் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று நம்பலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

ஏற்கனவே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஏபிஎஸ் வசதியுடன்தான் செல்கின்றன. எனவே, ஏபிஎஸ் பிரேக் வசதியை அறிமுகம் செய்வதில் அந்நிறுவனத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லை.

ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சிக்னல்ஸ் 350 பைக்கின் புகைப்படத்தொகுப்பு கீழே...

Most Read Articles
English summary
We have already reported about the Royal Enfield Himalayan and Classic 500 getting ABS and the deliveries of the Himalayan ABS has already begun. Now, CarandBike reports that the Royal Enfield Classic 500 ABS is priced at Rs 2.10 lakh ex-showroom (Mumbai).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X