மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

125 சிசிக்கும் அதிகமான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

By Arun

125 சிசிக்கும் அதிகமான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும், ராயல் என்பீல்டு பைக்குகளில் ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ராயல் என்பீல்டு பைக் ஆர்வலர்களிடையே இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

மார்க்கெட்டில் எத்தனை பைக்குகள் போட்டியாக களமிறக்கப்பட்டாலும், ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான். லோன் வாங்கியாவது ராயல் என்பீல்டு பைக் வாங்குவேனே தவிர, வேறு எந்த பைக்கையும் வாங்க மாட்டேன் என ஒற்றை காலில் நின்று அடம் பிடிப்பவர்கள் ஏராளம்.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

அப்படிப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 பைக், விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. க்ரோம், பேட்டில் க்ரீன், டெசர்ட் ஸ்ட்ரோம் 500 என மொத்தம் 7 வேரியண்ட்களில், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 1.68 லட்ச ரூபாய். இதில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேரியண்ட் பெகாஸஸ். இதுதான் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கில் அதிக விலையுடைய வேரியண்ட். ஆம், இதன் விலை 2.49 லட்ச ரூபாய்.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் ஒரு லிமிட்டெட் எடிசன் ஆகும். இதனால் இந்தியாவிற்கு வெறும் 250 பைக்குகள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் புக்கிங் தொடங்கிய உடனேயே, 250 பைக்குகளும் மளமளவென விற்று தீர்ந்து விட்டன.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

என்னதான் இருந்தாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் எந்த ஒரு வேரியண்ட்டிலும் ஏபிஎஸ் (ANTI-LOCK BRAKING SYSTEM) பிரேக் வசதி கொடுக்கப்படவில்லை. ராயல் என்பீல்டு பைக் ஆர்வலர்கள் மத்தியில் இது ஒரு பெருங்குறையாகவே கருதப்படுகிறது. ஆனால் அதற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ஆம், ஏபிஎஸ் வசதியுடன் கூடிய ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளின் விற்பனை, அமெரிக்காவில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நிலையான அடிப்படையில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகள்தான் தற்போது அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளிலும், ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மத்திய அரசின் ஓர் உத்தரவும் கூட அதற்கான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறனுடன் தயார் செய்யப்படும் பைக்குகளுக்கு, வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியாவது கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதர பிரேக்கிங் சிஸ்டமை காட்டிலும், ஏபிஎஸ்தான் பாதுகாப்பானது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

எனவே இந்தியாவில் வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளில், ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்படலாம். இது ராயல் என்பீல்டு ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ஆனால் அமெரிக்காவை போல் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுமா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ட்யூயல் சேனல் ஏபிஎஸ்ஸின் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், அமெரிக்காவை போல் அல்லாமல், இந்திய மார்க்கெட்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை மட்டும் வழங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ஏனெனில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை வழங்கினால் கூட மத்திய அரசின் உத்தரவை ராயல் என்பீல்டு நிறுவனம் நிறைவேற்றியதாகவே கணக்கில் கொள்ளப்படும். எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சட்ட ரீதியான சிக்கல்கள் கூட எதுவும் எழாது.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ஆனால் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதிதான், பைக் ரைடர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கானது முன்புற மற்றும் பின்புறம் என 2 டயர்களில் வேலை செய்யும். இதன்மூலம் மிக வேகமாக வந்து திடீரென பிரேக் பிடித்தாலும் கூட ஸ்கிட்டிங் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பி கொள்ள முடியும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸானது, முன்பக்க டயரில் மட்டுமே செயல்படும்.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும், 499 சிசி 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

இதனிடையே அமெரிக்காவில் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்குகளில் 500 சிசி வேரியண்ட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்திய மார்க்கெட்டில், ராயல் என்பீல்டு கிளாசிக்கில் 350 சிசி வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி!

இதில், 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 346 சிசி இன்ஜின் பைக்கின் பொதுவான வசதிகள் எல்லாம், 499 சிசி பைக்கை போன்றே உள்ளன. ஆனால் 346 சிசி இன்ஜின் 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வெளிப்படுத்தும். 2 பைக்குகளும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸைதான் பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield Classic 500 range gets ABS as standard in USA; India next. read in tamil.
Story first published: Monday, June 4, 2018, 14:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X