கான்டினென்ட்டல் ஜிடி மோட்டார் சைக்கிளுக்கு விடைக்கொடுத்த ராயல் என்ஃபீல்டு..!!

Written By:

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கான்டினென்ட்டல் ஜிடி மாடல் பைக்கை கைவிட முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பெங்களூரை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு டீலர் ஒருவர் டிரைவ்ஸ்பார்க்கிடம் பிரத்யேகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

ராயல் என்ஃபீல்டு விரைவில்கான்டினென்ட்டல் ஜிடி மாடலில் 650 திறன் பெற்ற புதிய பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ட்வின்-சிலிண்டர் எஞ்சின் கொண்ட இந்த பைக்கிற்கான சந்தை நிலவரத்தை அதிகரிக்கவே அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Recommended Video - Watch Now!
Watch Now | Indian Navy's MiG-29K Crashed In Goa Airport | Full Details - DriveSpark
விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

முதன்முதலாக 2013ம் ஆண்டில் தான் கான்டினென்ட்டல் ஜிடி பைக் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது. பெரியளவில் விற்பனை திறனை எட்டவில்லை என்ற காரணத்தினால், கான்டினென்ட்டல் ஜிடி-க்கான வரவேற்பு குறைந்தது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

தற்போது இந்த பைக்கிற்கு இந்திய வாகன சந்தையில் பெரியளவில் டிமான்டு உருவாகாத காரணத்தினால், கான்டினென்ட்டல் ஜிடி மோட்டார் சைக்கிளுக்கு விடைக்கொடுக்க ராயல் என்ஃபீல்டு முடிவு செய்துள்ளது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

இந்தியாவின் இந்த மாடல் தோல்வியை தழுவியிருந்தாலும், மற்ற வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி மாடலுக்கு பெரிய விற்பனை திறன் உள்ளது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

தற்போது இந்த கஃபே ரேஸர் ரக பைக்கை விடுத்து, இன்டர்செப்டார் பைக்குடன் கான்டினென்ட்டல் ஜிடி மாடலின் எஞ்சினையும் 650சிசி திறனுக்கு ராயல் என்பீல்டு மேம்படுத்தியுள்ளது.

Trending On Drivespark Tamil:

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

தற்போதைய கான்டினென்ட்டல் பைக்கில் 535 சிசி திறன் பெற்ற எஞ்சிள் உள்ளது. இது அதிகப்பட்சமாக 29 பிஎச்பி பவர் மற்றும் 44 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

பௌவோலி சஸ்பென்ஷன், பைபர் டிஸ்க் பிரேக் என பீர்மியர் தர பாகங்கள் பைக்கின் செயல்திறன் அம்சத்திற்காக பொருத்தப்பட்டுள்ளன.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் வெளிவரும் புதிய கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக், 2017 இத்தாலி இஐசிஎம்ஏ கண்காட்சியில் உலக பார்வைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

தற்போதைய மாடலில் மொத்த வடிவம் மற்றும் அமைப்புகள் அப்படியே இருக்க, கான்டினென்ட்டல் ஜிடி பைக்கின் எஞ்சினில் 650 திறன் மட்டும் கூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

648சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பெற்ற புதிய ராயல் என்ஃபீல்ட் கான்டினென்ட்டல் ஜிடி பைக், அதிகப்பட்சமாக 46.3 பிஎச்பி பவர் மற்றும் 52 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

Trending on Drivespark:

பெட்ரோல் பற்றி நிலவும் தவறான கூற்றுகளும், உண்மைகளும்!

யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கின் அறிமுக தேதி விபரங்கள் வெளிவந்தன

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

மிகவும் நவீன முறையில் செயல்படும் விதமாக இந்த 650சிசி திறன் பெற்ற எஞ்சின் கான்டினென்ட்டல் ஜிடி பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

இந்தாண்டு கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக்குடன் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கையும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதை எதிர்நோக்கியும் உலகளவில் பல வாடிக்கையாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

இன்டர்செப்டார் 650 பைக் முழுக்க நேர்த்தியான மற்றும் கிளாசிக் வடிவத்தில் இருக்கிறது. விற்பனையில் இந்த மாடல் சக்கைப்போடு போடும் என்று ராயல் என்ஃபீல்டு எதிர்பார்க்கிறது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

இந்தியாவில் கான்டினென்ட்டல் ஜிடி பைக்கிற்கு வரவேற்பு குறைந்த நிலையில் அதை 650சிசி திறனில் மேம்படுத்தி 2018 மார்ச் அல்லது ஏப்ரலில் ராயல் என்ஃபீல்டு வெளியிடும் என்று தெரிகிறது.

விடைபெறும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்..!!

நமது நாட்டில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கான விற்பனை திறன் உச்சநிலையில் உள்ளது. தொடர்ந்து அதை புதியதாக வெளிவரும் கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 பைக்குகள் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending DriveSpark YouTube Videos

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Royal Enfield Continental GT Discontinued In India Continental GT 650 Coming Soon. Click for Details...
Story first published: Thursday, January 4, 2018, 16:41 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark