ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் எஞ்சின்களின் அதிர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், புதிய உதிரிபாகத்தை கேர்பெர்ரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

By Saravana Rajan

Recommended Video

Tata Nexon Faces Its First Recorded Crash

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக வாடிக்கையாளர்கள் கருதுவது எஞ்சின் அதிர்வு பிரச்னைதான். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் கேர்பெர்ரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விசேஷ உதிரிபாகம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கட்டமைப்பில் 1000சிசி எஞ்சினை பொருத்தி சொந்த பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது கேர்பெர்ரி நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பிரச்னையை புரிந்து கொண்டு எஞ்சின் அதிர்வை குறைக்கும் விசேஷ உதிரிபாகத்தை அறிமுகம் செய்துள்ளது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

"Engine Vibration Reduction Plate" என்ற பெயரில் இந்த உதிரிபாகம் குறிப்பிடப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மற்றும் 500சிசி UCE கட்டமைப்பு கொண்ட எஞ்சின்களுக்கு இந்த பிளேட்டை பொருத்த முடியும்.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மற்றும் 500சிசி UCE கட்டமைப்பு கொண்ட எஞ்சின்களின் வலது பக்க கிராங்க்சாஃப்ட் அமைப்பில் இந்த உதிரிபாகத்தை பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

மோட்டார்சைக்கிளில் ஆக்சிலரேட்டரை அதிகரிக்கும்போது, கேம் சாஃப்ட் வீல் சுழற்சியின்போது ஏற்படும் அதிர்வுகள் மோட்டார்சைக்கிள் முழுவதும் பரவுகிறது. இதனை தடுக்கும் விதத்தில், இந்த பிளேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

கேம் வீலை இயங்கும் பற்சக்கர அமைப்புக்கும், முனையில்ல கொடுக்கப்பட்டு இருக்கும் பேரிங்கிற்கும் இடையில் இந்த பிளேட்டை பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிர்வுகள் வெகுவாக குறையும் என்றும் கேர்பெர்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

மேலும், மோட்டார்சைக்கிள் 60 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் செல்லும்போதும் இருக்கும் லேசான அதிர்வுகளும் வெகுவாக குறையும் என்றும், க்ராங்சாஃப்ட்டில் இருக்கும் பேரிங்குகளின் தேய்மானமும் குறையும் என்று கேர்பெர்ரி தெரிவித்துள்ளது. ரூ.3,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

அதிர்வுகள் அதிகம் இருப்பதாக கருதும் ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்கள் கேர்பெர்ரி நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று இந்த புதிய உதிரிபாகம் குறித்த தகவல்களை பெறலாம். எனினும், இப்போது அந்த இணையதளத்தில் இருப்பு காலியாகிவிட்டதாக தெரிவிக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு எஞ்சின் அதிர்வை குறைப்பதற்கு புதிய உதிரிபாகம் அறிமுகம்!

எனவே, இ-மெயில் மூலமாக உங்களது தேவையை கேர்பெர்ரி நிறுவனத்திடம் தெரிவித்தால், நிச்சயம் உங்களுக்கு இந்த அதிர்வு குறைக்கும் உதிரிபாகம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
One of the biggest concerns for a Royal Enfield motorcycle owner is the bike's engine vibration, but that is set to change. The Royal Enfield engine vibration reduction plate has been launched by one of the best custom bike builders Carberry Motorcycles.
Story first published: Friday, January 26, 2018, 11:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X