ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்தியாவில் அட்வென்ச்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் சிறந்த பட்ஜெட் விலை கொண்ட மாடலாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகயைில், பிரத்யேக அம்சங்கள் கொண்ட புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 'ஸ்லீட்' என்ற பெயரில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. மொத்தமாகவே 500 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே இந்த லிமிடேட் எடிசன் மாடலாக கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

ராணுவ உடுப்பை நினைவூட்டும் விதத்தில் இந்த மோட்டார்சைக்கிளில் பெயிண்ட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. அடையாளங்களை மறைப்பதற்காக கொடுக்கப்படும் இந்த விசேஷ வண்ணக் கலவையுடன் வந்திருப்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது.

Trending On Drivespark Tamil:

புதிய ஸ்விஃப்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரூ. 17000 வரை கார்கள் விலையை உயர்த்திய மாருதி..!

ரயிலின் கடைசிப்பெட்டிய கவனிச்சா பின்னாடி 'X'-ன்னு வரையப்பட்டுயிருக்கும்... அது ஏன் தெரியுமா..??

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

வித்தியாசமான வண்ணக் கலவை தவிர்த்து, எக்ஸ்ப்ளோரர் கிட் என்ற விசேஷ ஆக்சஸெரீகள் கூடுதலாக இந்த மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், 26 லிட்டர் கொள்திறன் கொண்ட அலுமினியம் பெட்டிகள், அலுமினியம் ஹேண்டில்பார், விசேஷ பூச்சுடன் கூடிய எஞ்சின் கார்டு உள்ளிட்டவை கூடுதல் அம்சங்களாக இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

ஹிமாலயன் ஸ்லீட் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்கி வரும் 30ந் தேதி வரை நடக்கிறது. ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு நடக்கிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

வரும் 30ந் தேதி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் மோட்டார்சைக்கிளுக்கு விற்பனை நடக்கிறது. அன்றைய தினம் மீதமுள்ள பணத்தை செலுத்தி டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் 411சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

Trending On Drivespark Tamil:

ரூ.3 கோடி விலையில் புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் சில குறிப்புகள்!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், கரடு முரடான சாலைகளை மிக எளிதாக எதிர்கொள்ளும். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. முன்புறத்தில் 21 அங்குல ஸ்போக் வீலும், பின்புறத்தில் 18 அங்குல ஸ்போக் வீலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் எடிசன் மோட்டார்சைக்கிள் ரூ.2,12,666 சென்னை ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சாதாரண ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளைவிட இந்த ஸ்லீட் எடிசன் மாடல் ரூ.28,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Royal Enfield Himalayan Sleet Edition Launched In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark