ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்!!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

கடந்த 1ந் தேதி முதல் 125சிசி திறனுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கொடுக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

அண்மையில் ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக ஸிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாகவே செல்கிறது. இந்த நிலையில், இந்த மாடலை இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுவதன் மூலமாக ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்திற்கு மட்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. ஆனால், இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் ஹிமாலயன் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் சாகச பயணங்கள் செல்வோர் விரும்பி வாங்குகின்றனர். எனவே, டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்பது புதிதாக இந்த மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு சிறந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

அவசர சமயங்களில் பிரேக் பிடிக்கும்போது பிரேக் பேடுகள் சக்கரங்களை திடீரெ பிடித்து இறுக்கும்போது சக்கரங்கள் சுழற்சி நின்றுபோய் வாகனம் சறுக்கிச் சென்று விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கும் வாகனங்களில் பிரேக் பவர் சீரான இடைவெளியில் விட்டு விட்டு செலுத்தப்படும். இதனால், சக்கரங்களின் சுழற்சி திடீரென தடைபடுவது தவிர்க்கப்படுகிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!!

இந்த பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக வாகனத்தை குறைவான தூரத்திலேயே நிறுத்துவதுடன், வாகனத்தின் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும். வாகனங்களுக்கான அடிப்படை பாதுகாப்பு வசதியாக தற்போது மாறி இருக்கிறது.

Source: ZigWheels

Most Read Articles
English summary
We have already reported about the Royal Enfield Bullet to feature single-channel ABS as standard. Now, ZigWheels reports that the Royal Enfield Himalayan will be equipped with dual-channel ABS.
Story first published: Wednesday, April 11, 2018, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X