TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சென்னையில் வைத்து தீவிரமாக சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது. ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள சர்வதேச ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மையத்தின் அருகில் புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டபோது, இந்த ஸ்பை படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலாகவும், புதிய டிசைனிலும் வருவதால், அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதன் இரட்டைப் பிறவியாக வர்ணிக்கப்படும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளும் இதனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால், அந்த மாடல் உடன் சோதனை செய்யப்படவில்லை.
இந்த புதிய இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டு இருக்கும் 650சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மோட்டார்சைக்கிளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பதுடன், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பட்ஜெட் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு கொடி கட்டி பறக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் புதிய வாடிக்கையாளர் வட்டத்தை ஏற்படுத்தி தரும் என்று நம்பலாம்.