யூஸ்டு பைக் விற்பனையில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

Written By:

பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் துவங்கி இருக்கிறது.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

விண்டேஜ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் இந்த நிறுவனத்தின் முதல் ஷோரூம் சென்னையில் திறக்கப்பட்டு இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கான ஷோரூம்களை நாடு முழுவதும் படிப்படியாக திறக்கவும் திட்டமிட்டுள்ளது.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

பயன்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களை தனது விண்டேஜ் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்ய இருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

இங்கு விற்பனை செய்யப்படும் பழைய மோட்டார்சைக்கிள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, பழுதுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு செல்லும். பரிசோதிக்கப்பட்டதற்கான சான்றும் வழங்கப்படும்.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவு தலைவர் ஷாஜி கோஷி கூறுகையில், "பழைய மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பும், வர்த்தக வாய்ப்பும் இருப்பதை பார்த்தே விண்டேஜ் நிறுவனத்தை துவங்கி இருக்கிறோம். மோட்டார்சைக்கிள் பாரம்பரியம், அனுபவத்தை ஒரு வாடிக்கையாளரிடமிருந்து அடுத்த வாடிக்கையாளருக்கு கடத்தும் விதத்தில் இந்த நிறுவனம் செயல்படும்," என்று கூறினார்.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

சென்னை, பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் இந்த புதிய விண்டேஜ் ஷோரூமை ராயல் என்ஃபீல்டு திறந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே இந்த ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும்.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

பயன்படுத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதுப்பொலிவு ஆகிய மூன்று விதமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் இங்கு விற்பனைக்கு கிடைக்கும் என்றும் ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை சரிசெய்வதையும், புதுப்பொலிவு கொடுப்பது ஒரு பிரிவாகவும், விண்டேஜ் அந்தஸ்து பெற்ற மிக பழமையான மோட்டார்சைக்கிள்களை அதன் ஒரிஜினல் கண்டிஷனில் புதுப்பித்து தருவதும் இந்த விண்டேஜ் ஷோரூமின் சிறப்பாக இருக்கும்.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

விண்டேஜ் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் 92 பாயிண்ட் தர பரிசோதனைகள் செய்யப்படுவதுடன், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தரமான ஒரிஜினல் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படும்.

யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கிய ராயல் என்ஃபீல்டு: சென்னையில் முதல் ஷோரூம்!

விண்டேஜ் ஷோரூமில் மோட்டார்சைக்கிள்கள் புதுப்பொலிவு கொடுக்கும் பணிகள் வெளிப்படையாக இருக்கும் விதத்தில் சில நடைமுறைகKள் பின்பற்றப்படும். விண்டேஜ் ஷோரூம்கள் மூலமாக மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு கடன் உதவி மற்றும் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களும், விற்பனைக்கு பிந்தைய சேவைகளும் கிடைக்கும்.

English summary
Royal Enfield Pre-Owned Motorcycle Store 'Vintage' launched in India. Iconic motorcycle manufacturer, Royal Enfield has forayed into a pre-owned motorcycle segment with the launch of first such store in Chennai, Tamil Nadu.
Story first published: Thursday, March 8, 2018, 18:41 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark