ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

அடுத்த ஆண்டு முதல் 125சிசி ரகத்திற்கு மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் பாதுகாப்பு தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த வரிசையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தனது மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த புதிய மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து ராயல் என்ஃபீல்டு டீலர்களிலும் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து ஏபிஎஸ் வசதி கொண்ட தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் 346சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்புற சஸ்பென்ஷனை 5 நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 19 அங்குல மல்டி ஸ்போக் சக்கரங்களும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 280 மிமீ ிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்கும் உள்ளது பின்புற டிஸ்க் பிரேக் இப்போது ஏபிஎஸ் பிரேக் நுட்பத்தில் இயங்கிறது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிள் ரோவிங் ரெட் மற்றும் விம்சிக்கல் ஒயிட் ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், தட்டையான ஹேண்டில்பார் அமைப்பு, பிளவு பட்ட க்ராப் ரெயில் கைப்பிடிகள், 20 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டதாக வருகிறது.

விரைவில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாக இருக்கும் நிலையில், ராயல் என்ஃபீல்டு தனது மாடல்களை ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்து வருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Video Source:YouTube/Abinash Panigrahi

Most Read Articles
English summary
Royal Enfield Thunderbird 350X ABS model launched in India. Royal Enfield has introduced the Thunderbird 350X ABS model in the Indian market. The Royal Enfield Thunderbird 350X ABS is priced at Rs 1.60 lakh, ex-showroom (Bangalore).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X