TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் மாடலுக்கு அனைத்து ராயல் என்ஃபீல்டு டீலர்களிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. ரூ.5,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கூடுதல் பாதுகாப்பு வசதி பெற்ற மாடலாக மாறி இருக்கிறது.
புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் ஏபிஎஸ் மாடலில் 499சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 41 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற ஷாக் அப்சார்பரை 5 நிலைகலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 19 அங்குல டயரும், பின்புறத்தில் 18 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் மோட்டார்சைக்கிள் டிரிஃப்டர் புளூ மற்றும் கெட் அவே ஆரஞ்ச் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ஃப்ளாட் ஹேண்டில்பார் அமைப்பு, பிளவுபட்ட கிராப் ரெயில் கைப்பிடிகள், சிறப்பான ரைடிங் பொசிஷன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.
புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் மோட்டார்சைக்கிளின் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.2.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பாதுகாப்புக்கு நிச்சயம் இது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.