ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

புதிய 350சிசி மோட்டார்சைக்கிளை ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்த புதிய மாடல் வரும் 27ந் தேதி சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது

By Saravana Rajan

வாடிக்கையாளர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற இருக்கிறது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஆம். தனது 350சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் வசதியை அளிக்க இருக்கிறது.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

இதுதொடர்பாக சில படங்களும் ஆட்டோமொபைல் இணையதளங்கள் வழியாக கசிந்துள்ளன. அதன்படி, புதிய 350சிசி மோட்டார்சைக்கிளை ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

எமக்கு கிடைத்திருக்கும் அழைப்பு கடிதம் மூலமாக, இந்த புதிய மாடல் வரும் 28ந் தேதி சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதை யூகிக்க முடிகிறது. இரண்டு சக்கரங்களுக்குமான ஏபிஎஸ் பிரேக் தொழில்நுட்பமே டியூவல் சேனல் ஏபிஎஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தவிர்த்து, இரண்டு புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் வர இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேட் புளூ மற்றும் மேட் பீஜ் ஆகிய இரண்டு வண்ணங்கள் புதிய தேர்வாக இருக்கும்.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

இந்த புதிய மாடல்களில் பழுப்பு வண்ண லெதர் இருக்கை, பெட்ரோல் டேங்கில் தயாரிப்பு வரிசைய குறிக்கும் பிரத்யே எண், பச்சை மற்றும் ஆரஞ்ச் வண்ண டீக்கெல் ஸ்டிக்கர்கள் இடம்பெறுகிறது. எஞ்சின் கேஸ், புகைப்போக்கி குழாய், சக்கரங்கள், டெயில் லைட்டுகள் போன்றவை கறுப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

ராயல் என்ஃபீல்டு 350சிசி ரக மோட்டார்சைக்கிள்களில் இருக்கும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும்,28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ரகத்தில் கிளாசிக் 350 மாடல் வாடிக்கையாளர்களிடத்தில் அமோக ஆதரவை பெற்ற மாடலாக விளங்குகிறது.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

இது புதிய மாடலாக வருமா அல்லது கிளாசிக் 350சிசி மோட்டார்சைக்கிளின் 2018 மாடலாக அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. எனினும், கிளாசிக் 350 அடிப்படையிலான மாடல் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது.

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

பண்டிகை காலத்தில் புதிய மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டிருப்போரை கவரும் விதத்தில் இந்த செய்தி கிடைத்துள்ளது. வரும் 27ந் தேதி புதிய ராயல் என்ஃபீல்டு 350சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Image Courtesy: TeamBHP

Most Read Articles
English summary
Royal Enfield to Launch New Motorcycle With ABS on August 28.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X