ராயல் என்ஃபீல்டு புதிய உச்சம்: பிப்ரவரியில் 73,077 வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனை..!!

Written By:

இந்திய சாலைகளில் ஆக்கிரமித்து வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை கடந்தாண்டை விட இந்தாண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

நம் நாட்டின் இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் முதல் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த இருசக்கர வாகன நிறுவனம் உண்டு என்றால் அது ராயல் என்ஃபீல்டு தான்.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

சாமானியன் முதல் பெரும் புள்ளிகள் வரை அனைவருக்கும் ஏற்ற விலையில் வெளியாகி, சமளவு அந்தஸ்துடன் வலம் வருவது தான் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் சிறப்பே.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இந்தியாவில் மட்டுமில்லாமல் பல உலக நாடுகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரியில் வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையில் மட்டும் சுமார் 73,077 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இதன் காரணமாக கடந்த 2017 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் இந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனையில் சுமார் 25 சதவீத அதிக விற்பனை திறனை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இந்தியாவில் கிளாஸிக் 350, தண்டர்பேர்டு, கான்டினென்ட்டல் ஜிடி, ஹிமாலயன் போன்ற மாடல்களை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரியில் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சுமார் 71,534 யூனிட்டுகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இதை கடந்தாண்டு விற்பனை திறனோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 2017 பிப்ரவரியில் சுமார் 56,337 யூனிட் வாகனங்களை ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இந்நிறுவனம் விற்பனை செய்த மாடல்களில் கிளாசிக் மோட்டார் சைக்கிள் முன்னணியில் இருக்கிறது. சமீபத்தில் கிளாசிக் பைக்கில் தோற்றம் மற்றும் செயல்திறன் மெருகூட்டப்பட்டு அது விற்பனைக்கு வந்ததே அதற்கு காரணம்.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

தவிர விரைவில் வெளிவரவுள்ள இன்டர்செப்டார் 750 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 750 போன்ற புதிய ரக பைக்குகள் மூலம் ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் மாடல்களுக்கு ராயல் என்ஃபீல்டு போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றிலேயே அலாய் சக்கரங்கள், டியூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் சமீபத்தில் விற்பனைக்கு வந்த பைக் தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார் சைக்கிள்.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இந்த பைக் தோற்றத்தில் முந்தைய தலைமுறை மாடல் போல காட்சியளித்தாலும், பல புத்தம் புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக 2018 தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார் சைக்கிள் தயாராகியுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

வட்ட வடிவிலான முன்பக்க முகப்பு விளக்குகள், ப்ரொஜெக்டர் லைட், எல்.இ.டி பகல் நேர விளக்குகள் மற்றும் மேட் பிளாக் நிறம் கொண்ட புதிய நிற தேவைகள் ஆகியவற்றில் 2018 தண்டர்பேர்டு சிரீஸ் தயாராகியுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகள் ஒரேவிதமான தோற்றப்பொலிவை பெற்றிருக்கின்றன. க்ரூஸர் ஸ்டைல் ஹேண்டில்பார்கள், செமி-டிஜிட்டல் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என அனைத்தும் ஒன்று போலவே உள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு 2018 பிப்ரவரி விற்பனை

இந்தியாவில் தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலின் விலை ரூ.1.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), தண்டர்பேர்டு 500எக்ஸ் விலை ரூ.1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Royal Enfield February Sales Increases 25 Percentage. Click for Details...
Story first published: Monday, March 5, 2018, 11:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark