ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

Written By:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விசேஷ மாதத் தவணை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இதற்கான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கேபிட்டல் ஃபர்ஸ்ட் நிதி நிறுவனம் வழியாக தனது 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு இந்த சிறப்பு மாதத் தவணை திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

இந்த சிறப்பு மாதத் தவணை திட்டத்தின் மூலமாக குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த திட்டங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களின்படி, 346சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு 8.75 சதவீதம் முதல்ல 9.18 சதவீதம் வரை வட்டி விகிதத்திலும், 499சிசி மாடல்களுக்கு 6.63 சதவீதம் முதல்ல 6.85 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்திலும் கடன் திட்டம் வழங்கப்படுகிறது.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

இரண்டு ஆண்டுகள் மாதத் தவணை திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி திட்டத்தை பெற முடியும். வட்டி விகிதத்தின்படி, 499சிசி மோட்டடார்சைக்கிள்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் விதத்தில், மிக குறைவான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

ரூ.1 லட்சத்திற்கு கடன் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மாதத் தவணை போடும்போடு, மாதத்திற்கு ரூ.4,900 வீதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த கடன் உதவி திட்டத்திற்கு 2 சதவீதம் பிராசஸிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

மேலும், முன்கூட்டியே மாதத் தவணையை பிடித்தம் செய்யும் நடைமுறையும் இல்லை என்பது இந்த திட்டத்தின் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் மற்றும் நிலையான மாத வருமானம் இல்லாதோருக்கும் கூட குறைவான ஆவணங்களுடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு விஷேச கடன் திட்டம் அறிமுகம்!

மோட்டார்சைக்கிள் தவிர்த்து, ஆக்சஸெரீகளுக்கும் சேர்த்து கடன் உதவி பெற முடியும். மேலும், மேற்கண்ட நிதி நிறுவனங்கள் வழியாக உடனடி கடனுதவியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மிக எளிதாக கடனுதவி பெற்று ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Special Finance Scheme For Royal Enfield Motorcycles.
Story first published: Monday, March 12, 2018, 14:41 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark