சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலையும், புதிய ஸ்பெஷல் எடிசன் அக்செஸ் 125 ஸ்கூட்டரையும் சுஸுகி

By Saravana Rajan

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

இந்தியாவின் 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சுஸுகி அக்செஸ் மிகச் சிறந்த தேர்வாக முன்னிலை வகிக்கிறது. மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட மாடலாகவும் பெயர் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஆக்டிவா 125 உள்ளிட்ட மாடல்களால் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

இதனை போக்கிக் கொள்ளும் விதமாக புதிய முயற்சிகளில் சுஸுகி நிறுவனம் கையாண்டு வருகிறது. அதன்படி, தற்போது காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலையும், புதிய ஸ்பெஷல் எடிசன் அக்செஸ் 125 ஸ்கூட்டரையும் சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

சுஸுகி அக்செஸ் 125 சிபிஎஸ் பிரேக் மாடலுக்கு ரூ.58,980 எக்ஸ்ஷோரூம் விலையாகவும், ஸ்பெஷல் எடிசனுக்கு ரூ.60,580 விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்பெஷல் எடிசன் மாடலில், மெட்டாலிக் சோனிக் சில்வர் என்ற புதிய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பீஜ் வண்ண லெதர் இருக்கையுடன் கிடைக்கும்.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

தவிரவும், கருப்பு வண்ண அலாய் வீல்கள், புதிய கிராப் ரெயில் கைப்பிடிகள், க்ரோம் பூச்சுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், ஸ்பெஷல் எடிசன் லோகோ ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஆக்டிவா உள்ளிட்ட பல மாடல்களில் வழங்கப்படுகிறது. பிரேக் பிடிக்கும்போது இரண்டு சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பவரை செலுத்தி வண்டியை நிறுத்துவதற்கு ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டமாக சிபிஎஸ் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஸ்கூட்டர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விஷயமாக பார்க்க முடியும்.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

மற்றபடி, பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 124சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் கொண்ட மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன.

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!

முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் - அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. அாய் வீல்கள், மொபைல் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

Most Read Articles
English summary
Suzuki Motorcycles India has launched the Access 125 Special Edition. The new Access 125 now also features the Combined Braking System (CBS). The Access 125 CBS is priced at Rs 58,980, while the Access Special Edition costs Rs 60,580. All prices are ex-showroom (Delhi).
Story first published: Thursday, June 14, 2018, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X