புதிய சுஸுகி பர்க்மேன் 125சிசி ஸ்கூட்டர்: சிறப்பு கண்ணோட்டம்!

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டர் குறித்த சிறப்பு கண்ணோட்டத்தை பார்க்கலாம்.

By Saravana Rajan

ஐரோப்பிய நாடுகளில் மேக்ஸி என்ற ரகத்திலான ஸ்கூட்டர் மாடல்கள் வாடிக்கையாளர் மத்தியில் வெகு பிரபலமானது. சக்திவாய்ந்த எஞ்சினுடன் பந்தாவான தோற்றத்துடன் கூடிய மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்களை அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.

சுஸுகி பர்க்மேன் வரிசை:

சுஸுகி பர்க்மேன் வரிசை:

மேக்ஸி ஸ்கூட்டர் தயாரிப்பில் பல ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் பர்க்மேன் குடும்ப வரிசையில் பல மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 150சிசி மமுதல் 650சிசி வரையிலான மேக்ஸி ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன.

ஐரோப்பிய பாரம்பரியம்:

ஐரோப்பிய பாரம்பரியம்:

ஐரோப்பிய நாடுகளில் பாரம்பரியம் மிக்க மேக்ஸி ஸ்கூட்டர் ரகத்தின் சுவையை இந்தியர்களுக்கும் கொடுக்க முனைந்துள்ளது சுஸுகி நிறுவனம். போதுமான திறனுடன், நியாயமான நிலையில் வாகனங்களை எதிர்பார்க்கும் இந்தியர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு தனது பர்க்மேன் வரிசையிலான 125சிசி மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருக்கிறது சுஸுகி.

இந்தியர்களுக்கு தரிசனம்:

இந்தியர்களுக்கு தரிசனம்:

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தியாவின் 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான சந்தையை பெற்றிருக்கும் சுஸுகி நிறுவனம் தனது சந்தையை வலுப்படுத்தவும், புதிய ரகத்தின் சுவையை இந்தியர்களுக்கு ஊட்டும் விதமாக இந்த புதிய மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

 டிசைன்:

டிசைன்:

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புற்றீசல் போல ஏராளமான மாடல்கள் குவிந்துவிட்டன. அதிலிருந்து மிக தனித்துவமான மாடலாக இந்த ஸ்கூட்டரின் தோற்றம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. மேக்ஸி ஸ்கூட்டர்களில் ஸ்டெப்டு ஃப்ரேம் என்ற ஏற்ற, இறக்கமான ஃப்ரேம் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால், முன்புறம் மிக வித்தியாசமான வடிவமைப்பு வசீகரிக்கிறது.

ஹெட்லைட்:

ஹெட்லைட்:

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட்டின் இருபுறமும் பிளவுபட்டு நிற்கும் பேனலில் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஹெட்லைட், இண்டிகேட்டர் மற்றும் முன்புற விண்ட்ஷீல்டு போன்றவை ஸ்கூட்டருக்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்:

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்:

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பாருக்கு பின்புறத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்ப்டடு இருக்கிறது. அதனை விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி பாதுகாக்கிறது.

ஸ்டோரேஜ் வசதி:

ஸ்டோரேஜ் வசதி:

இருக்கைக்கு கீழே ஹெல்மெட் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான ஸ்டோரேஜ் பகுதி இருக்கிறது. மேலும், மொபைல்போன்களை சார்ஜ் செய்வதற்கான 12V டிசி சார்ஜர் போர்ட்டும் இருக்கிறது. முழுமையான அளவுடைய ஹெல்மெட்டை வைப்பதற்கான இடவசதி இருக்கிறது.

 பின்புற டிசைன்:

பின்புற டிசைன்:

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் க்ராப் ரெயில் எனப்படும் பின் இருக்கைக்கான கைப்பிடி வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், பிளவுபட்ட அமைப்பு இல்லாமல் ஒற்றை ஃப்ரேமில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட் கன்சோலில் இருபுறத்திலும் இன்டிகேட்டர் விளக்கு பகுதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எஞ்சின்:

எஞ்சின்:

இந்திய 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதன்மை வகிக்கும் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரின் அதே 124 சிசி எஞ்சின்தான் இந்த புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 செயல்திறன்:

செயல்திறன்:

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் பொதுவாக மிகச் சிற்பபான செயல்திறனை வெளிப்படுத்தும். சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரின் டிசைனைவிட அதன் செயல்திறன் மிக்க எஞ்சினை விரும்பியே பலரும் வாங்குகின்றனர். அதே எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் இருப்பதால், பர்க்மேன் ஸ்ட்ரீட் தோற்றத்திற்கு தக்கவாறு செயல்திறனும் மிகச் சிறப்பாகவே இருக்கும்.

இருக்கை அமைப்பு:

இருக்கை அமைப்பு:

இரண்டு பேர் அமர்ந்து செல்வதற்கு போதுமான இருக்கை வசதியையும், ஓட்டுனருக்கு அலுப்பில்லாமல் செல்வதற்கு ஏற்ற வகையிலும் இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது.

சஸ்பென்ஷன்:

சஸ்பென்ஷன்:

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சாலைகளுக்கு இந்த சஸ்பென்ஷன் அமைப்பு மேம்பட்ட பயண உணர்வை வழங்கும்.

சக்கரங்கள்:

சக்கரங்கள்:

முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், 90/90-12 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் 90/100-10 டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றத்திற்கு சக்கரங்கள் அளவு சிறியதாக இருப்பது போன்ற பிம்பம் இருக்கிறது. விலை அதிகமாகாத வகையில், இந்த சக்கரங்களை சுஸுகி பயன்படுத்தி இருக்கலாம்.

பிரேக் சிஸ்டம்:

பிரேக் சிஸ்டம்:

முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவசர சமயங்களில் மிகச் சிறப்பான பிரேக்கிங் திறனை பெறுவதற்கு இந்த டிஸ்க் பிரேக் சிறப்பானதாக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை:

எதிர்பார்க்கும் விலை:

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் நிச்சயம் இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ரூ.65,000 முதல் ரூ.70,000 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Suzuki Burgman Street First Look Review. The Suzuki Burgman Street claims to be India's first Maxi scooter and brings with it a new design and a host of features. So can the Suzuki Burgman Street take on the likes of the Honda Grazia and the new TVS NTorq & Aprilia SR 125 in India's burgeoning premium 125cc scooter?
Story first published: Tuesday, February 13, 2018, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X