2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ்: சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்- புகைப்படங்களுடன் தகவல்கள்..!!

Written By:

சர்வதேச நாடுகள் பலவற்றில் பிரபலமான பர்க்மன் ஸ்கூட்டர் வரிசையை பின்பற்றி, சுஸுகி தயாரித்துள்ள புதிய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

14வது ஆண்டாக நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா உட்பட பல சர்வதேச வாகன நிறுவனங்கள் தங்களது புதிய ரக வாகனங்களை தொடர்ந்து காட்சிப்படுத்தி வருகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுஸுகியின் பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர், இந்தாண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்துள்ளது.

ஆஜானுபாகுவாக தோற்றமளிக்கும் இந்த ஸ்கூட்டர் முன்னதாக 650சிசி திறனுடன், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

தற்போது இரண்டாவது முறையாக இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் பர்க்மன் ஸ்கூட்டர், இந்தியாவிற்கான மாடலாக தயாராகியுள்ளது.

125சிசி திறன் பெற்ற இந்த ஸ்கூட்டர்,

ப்ரீமியம் தர வடிவமைப்பு, தனித்துவம் பெற்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை 2018 டெல்லி எக்ஸ்போவில் தனிக்கவனம் பெற்றுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

குறிப்பாக ஐரோப்பா சந்தைகளில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் கட்டிங்-எட்ஜ் என்ற வடிவமைப்பு நுணுக்கம் பின்பற்றப்படும். அதே டிசைனிங்கில் தான் பர்க்மன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் காட்சியளிக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

இந்தியர்களின் இருசக்கர வாகன தேவையை இந்த ஸ்கூட்டர் நிச்சயம் மாற்றும் என்று தெரிவித்துள்ள சுஸுகி, ஸ்கூட்டர் செக்மென்டில் பர்க்மன் ஸ்டீரிட் ஒரு கேம் சேஜிங் தயாரிப்பாக இருக்கும் எனவும் கூறுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் எல்லா வடிவமைப்பு அம்சங்களும் பெரியளவில் தான் உள்ளன. குறிப்பாக ஹேன்டில்பாரில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகள் தனிக்கவனம் பெறுகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஸ்கூட்டரின் வடிவத்திற்கு ஏற்றவாறே பெரிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது ரைடர் மற்றும் பில்லியன் பயணி ஆகியோருக்கு அதிக இடவசதியை வழங்கும்.

பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் பின்பகுதி ஸ்டைலான டெயில் விளக்குகள் மற்றும் ஸ்போர்டி தோற்றத்தில் உள்ளது. இதன்மூலம் ஸ்கூட்டரின் ப்ரீமியம் தரம் நன்றாக தெரிகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

எல்.இ.டி முகப்பு விளக்குகள், விண்டுஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் போதுமான இடைவெளியில் கால் வைக்கும் பகுதி போன்ற வசதிகள் சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் உள்ள தனித்துவமான அம்சங்கள்.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

சர்வதேச நாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் புர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் 125சிசி, 200சிசி, 250சிசி, 400 சிசி மற்றும் 600சிசி என பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

2018ம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் 125சிசி எஞ்சின் திறனில் மட்டுமே கிடைக்கும். இதை தவிர சுஸுகி இந்த ஸ்கூட்டர் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஆனால் மற்ற நாடுகளில் விற்பனையாகும் பர்க்மன் ஸ்கூட்டர்களை காட்டிலும், இந்தியாவிற்கான பர்க்மன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் செயல்திறன் வேறுபடும் என்பது மட்டும் உறுதி.

இந்த ஸ்கூட்டரை தொடர்ந்து மொத்தம் 17 விதமான புதிய ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுஸுகி 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

அதில் குறிப்பாக 1000சிசி திறன் பெற்ற ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 மோட்டார் சைக்கிள், ஆட்டோ எக்ஸ்போவில் பரபரப்பை கூட்டியுள்ளது. புதிய ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரானது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

சுஸுகி ஏக்சஸ் ஸ்கூட்டரில் உள்ள 125சிசி திறன் பெற்ற எஞ்சின் தான் பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் வழங்கப்படவுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு ரூ. 60,000 விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

English summary
Read in Tamil: Suzuki Burgman Street Scooter Revealed Expected Launch Date, Price And Images. Click for Details...
Story first published: Wednesday, February 7, 2018, 12:54 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark