திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

பலரும் எதிர்பார்த்து வந்த இந்த ஸ்கூட்டர் காட்சிக்கு வந்த நிலையில், டெல்லி எக்ஸ்போவில் அது பலரையும் கவர்ந்தது. இதனால் இந்தியாவில் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

இழுவைத்திறன் 125சிசி பெற்ற இந்த ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. முன்னதாக 2019ம் ஆண்டில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என சொல்லப்பட்டது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

ஆனால் இங்குள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், 2018 ஏப்ரலில் இந்த ஸ்கூட்டரை சுஸுகி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

பல்வேறு நாடுகளில் பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் விற்பனையாகி வரும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்திய சாலைகளுக்கு ஏற்ற 125சிசி எஞ்சின் தேர்வில் வெளிவருகிறது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

தோற்றத்தாலும், கவனமீர்க்கும் அம்சங்களாலும் கவர்ந்துள்ள சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு, இந்தியாவில் ரூ. 75,000 (ஆன் - ரோடு) வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் வடிவமைப்புகளை பின்பற்றி, இந்தியாவிற்கு ஏற்ற ஸ்கூட்டராக சுஸுகி இதை மாற்றியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ள இதில் எல்.இ.டி திறன் பெற்ற முகப்பு விளக்குகள், பாடி-மவுன்ட் விண்டுஸ்க்ரீன், பல்வேறு செயல்பாடுகளை பெற்ற கீ ஸ்லாட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதில் உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏக்சஸ் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள செயல்திறன் கட்டமைப்பை பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கும் சுஸுகி பின்பற்றியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

அதன் படி 125சிசி இழுவைத்திறன் கொண்ட சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 8.6 பிஎச்பி பவர் மற்றும் 10.2 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

தொடர்ந்து அதிக இடவசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வால்ட் மொபைல் சார்ஜிங் சாக்கேட், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் எல்.இ.டி திறன் பெற்ற டெயில் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

அதிகப்பட்சமாக 10.5 லிட்டர் ஃபியூயல் டேங்க் வசதி கொண்ட இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125, புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125, ஹோண்டா கிராஸியா போன்ற ஸ்கூட்டர்களுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும்.

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Read in Tamil Suzuki Burgman Street Scooter India Launch On 2018 April. Click for Details...
Story first published: Wednesday, March 7, 2018, 12:57 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark