ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

சுஸுகி ஜிக்ஸெர் பைக் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது 150-160சிசி செக்மென்ட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும் விளங்கி வருகிறது.

By Saravana Rajan

சுஸுகி ஜிக்ஸெர் பைக் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது 150-160சிசி செக்மென்ட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும் விளங்கி வருகிறது. இந்த சூழலில், ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர் பைக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாடலின் ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது மிகவும் அவசியமன அப்டேட்டாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

இந்த மாத இறுதியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலைவிட ரூ.7,000 கூடுதல் விலையில் ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு வர இருக்கிரது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

தற்போது ரூ.77,000 எக்ஸ்ஷோரூம் விலையில் சுஸுகி ஜிக்ஸெர் விற்பனை செய்யப்படுகிறது. டிஸ்க் பிரேக் மாடல் ரூ.80,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.87,000 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

இதன் ரகத்தில் ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. இந்த நிலையில், சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடல் ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கைவிட குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

இதன்மூலமாக இந்தியாவின் மிக குறைவான விலை ஏபிஎஸ் மாடல் என்ற இடத்தையும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடல் பெற இருக்கிறது. டிசைனில் மாற்றங்கள் இருக்காது. ஏபிஎஸ் பேட்ஜ் கொண்டதாக வருகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் 155சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!!

பஜாஜ் பல்சர் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி ஆகிய பைக் மாடல்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடல் போட்டியாக இருக்கும். ஏபிஎஸ் வசதியுடன் கூடிய ஜிக்ஸெர் வாடிக்கையாளர்களை கவரும் என்பதுடன், சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட மாடலாகவும் இருக்கும்.

Source: Bikeadvice

Most Read Articles
English summary
Suzuki Gixxer 155 ABS Model Spy Images.
Story first published: Friday, May 4, 2018, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X