ரூ. 80,928 ஆரம்ப விலையில் சுஸுகியின் 2018 ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இந்தியாவில் சுஸுகி நிறுவனம் 2018 ஜிக்ஸர் மற்றும் 2018 ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்குகளை (டெல்லி எக்ஸ் - ஷோரூம்) ரூ. 80, 928 மற்றும் ரூ. 90,037 விலையில் முறையே விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

2018 சுஸுகி ஜிக்ஸர் பைக் பல்வேறு ஸ்போர்ட்ஸ் தோற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய கிராஃபிக்ஸ் மற்றும் மோட்டோ ஜிபி-யின் ECSTAR லோகோ ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

தோற்றப்பொலிவில் மட்டும் மெருக்கேற்றப்படாமல், 2018 சுஸுகி ஜிக்ஸர் பைக் கேன்டி சோனோமா ரெட், மெட்டாலிக் சோனிக் சில்வர் ஆகிய இரண்டு நிற தேர்வை பெற்றுள்ளன.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

விலைக்கு மட்டும் அறிமுகம் செய்யாமல், சுஸுகி நிறுவனம் 2018 ஜிக்ஸர் பைக்கை தனது டீலர்களிடமும் அனுப்பி வைத்துள்ளது. அதன்படி தற்போதே அது விற்பனைக்கு தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

2018 சுஸுகி ஜிக்ஸர் மற்றும் 2018 சுஸுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்குகளில் அல்ட்ரா-லைட் 155சிசி எஞ்சின் உள்ளது. இந்த பைக்குகள் சுஸுகியின் சொந்தம் ஈகோ-பர்ஃப்பாமென்ஸ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

ஏர் கூல்டு, 155சிசி சிங்கிள்-சிலிண்டர் கொண்ட சுஸுகி ஜிக்ஸர் பைக்கின் எஞ்சின் 14.6 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இதன் முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்சக்கரத்தில் உள்ள மோனோஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

இரண்டு பைக்குகளிலும் டிஸ்க் பிரேக் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக் மட்டும் சிங்கிள்-சேனல் ஏபிஸ் பாதுகாப்பு அம்சத்தை பெற்றுள்ளது.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

விற்பனை விழாவில் பேசிய சுஸுகி இந்தியாவில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அதிகாரி சஞ்சீவ் ராஜசேகரன்,

"இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் 2018 ஜிக்ஸர் பைக் புதிய ஸ்போர்டி திறனுடன் தயாராகியுள்ளதாக கூறினார். இந்த செக்மென்ட் விரும்பிகளுக்கு நிச்சயம் ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்குகள் வரப்பிரசாதமாக அமையும்" என்று தெரிவித்தார்.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

சுஸுகி நிறுவனத்தின் ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் ஜிக்ஸர் மீது அதிக ஈர்ப்பை வைத்துள்ளனர்.

சுஸுகியின் புதிய 2018 ஜிக்ஸர் சிரீஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன..!!

2018 புதிய தலைமுறை மாடலாக வெளியாகியுள்ள இந்த ஜிக்ஸர் சிரீஸ் புதிய நிறத்தேர்வுகள் மற்றும் பல அழுத்தமான அம்சங்கள் மற்றும் ஸ்போர்டி திறனை தாங்கி வெளிவந்துள்ளது.

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Read in Tamil: 2018 Suzuki Gixxer And Gixxer SF Launched In India; Prices Start At Rs 80,928. Click for Details...
Story first published: Wednesday, March 7, 2018, 10:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark