சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் 300 காப்புரிமை படங்கள் கசிந்தன: இந்தியா வர வாய்ப்பு

Written By:

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சீனாவில் புதிய 300சிசி பைக்கிற்கு காப்புரிமை பெற்றிருக்கிறது. இந்த பைக் இந்தியாவில் ஜிக்ஸெர் 300 பிராண்டில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமான ஹாவோஜு நிறுவனத்தின் லட்சினையுடன் இந்த பைக் காப்புரிமை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் சுஸுகி பைக்குகளின் உருவாக்கத்தில் ஹாவோஜு முக்கிய பங்காற்றி இருக்கிறது.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

இந்த புதிய மோட்டார்சைக்கிள் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய 200-250சிசி ரகத்தில் புதிய மாடலை கொண்டு வர இருப்பதாக சுஸுகி ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

இந்த நிலையில், சுஸுகி குறிப்பிட்ட அந்த புதிய மாடல் இதுவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த பைக் சுஸுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஜிக்ஸெர் பிராண்டு வரிசையில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தொழில்நுட்ப விபரங்கள் பற்றி தகவல் இல்லை. எனினும், இந்த பைக்கின் காப்புரிமை படங்களை பார்க்கும்போது சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்250ஆர் பைக்கில் இருக்கும் பேரலல் ட்வின் 250சிசி எஞ்சின் போன்று தெரிகிறது. எனவே, இதே எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

இந்த புதிய பைக்கில் அலுமினிய ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டு இருக்கிறது. தலைகீழ் ஃபோர்க்குகள் அமைப்புடைய முன்புற சஸ்பென்ஷனும் பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

இந்த ஆண்டு இறுதியில் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக் மாடலை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் காட்சிக்குப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் சுஸுகி ஜிக்ஸெர் 300 பைக் மாடல்?

சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான ஜிஎஸ்எக்ஸ் வரிசை பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் மிரட்டலான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின் போன்றவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளிலும், அதனைத்தொடர்ந்து இந்திய மார்க்கெட்டிலும் இந்த பைக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy: Motorcycle.com

English summary
Suzuki's partner in the Chinese market, Haojue has filed a patent for a new naked motorcycle called as HJ300. Now, it is said that the leaked patent images preview the upcoming Suzuki GSX-S300 as Haojue manufactures bikes for the Japanese company.
Story first published: Thursday, April 12, 2018, 13:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark