ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

Written By:

புதிய சுசுகி ஜிஎஸ்எக்ஸ் -எஸ் 750 ரக பைக் வரும் ஜூன் - ஜூலை மாதங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்படுவதால், இந்த ரக பைக்குளிலேயே குறைந்த விலையான ரூ7.5 லட்சத்திற்கு விற்பனைக்கு வரலாம்.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் டூவிலர் மார்க்கெட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தங்கள் கம்பெனி நிகழ்த்தவுள்ளதாக அறிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

கடந்த பிப்., மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. ஹயாபுஸாவிற்கு அடுத்து இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் உயர் ரக பைக் இதுதான் எனவும் அறிவித்திருந்தது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

இந்த பைக் இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்படுவதால் இதன் விலை, இதன் போட்டியாளர் நிறுவனங்களின் பைக்குகளை விட குறைவானதாக இருக்கும். மேலும் அதன் வடிவமும் உயர்ரக பைக் பிரியர்களுக்கு விருப்பத்திற்குகேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

இந்த பைக் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை கவாஸகி இசட் 900 பைக்கை விட குறைவாக இருக்கும்.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 750 பைக்கில் 749 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், 6 கியர் இன்ஜின், 113 பிச்பி பவர், 80 என்.எம் டார்க் திறன் கொண்டது. இந்த பைக்கில் ஏ.பி.எஸ் தொழிற்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

இந்த பைக் ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 ரக பைக்கில் குறைந்த சிசி வேரியன்டாகவும் கருதப்படுகிறது. இதில் பியூயல் இன்ஜெக்சன் மோட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் 113 பிஎச்பி, 80 என்.எம் எனும் அதிக திறனை வெளிப்படுத்துகிறது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

சுசுகி ஜிஎஸ்எக்ஸ் -எஸ் 750 பைக் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் லைலேஜை தருகிறது. இதன் சேசிஸ் அலுமினியம் க்யர்டில் பிரேமை கொண்டுள்ளது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

பைக்கின் பிரேக்கை பொருத்தவரை முன் வீலில் 310எம்எம் டுவின் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலை பொருத்தவரை 220 எம்எம் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் அமைந்துள்ளது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

பைக்கின் சஸ்பென்சனை பொருத்தவைர கேஒய்பி இன்வெர்டட் ஃபோக்ஸ், மோனோ ஷாக் அபசர்பர்களை கொண்டுள்ளது. இரண்டு ஆலாய் வீல்களுடன் முன்பக்கம் 120/10-zr17 ரக டயரும், பின் பக்கம் 180/55-zr17 ரக டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

211 கிலோ எடை கொண்ட இந்த பைக் 16 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் வருகிறது. இது ப்ளூ -க்ரே மற்றும் ரெட் - க்ரே ஆகிய இரண்டு வித கலர்களில் கிடைக்கிறது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

இந்த பைக் மொத்தம் 6.9 அடி நீளமும் 2.5 அடி அகலம், 2.7 அடி உயரமும் கொண்டது. இந்த பைக் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபிள், யமஹா எம்டி-09, கவாஸசி இசட் 900 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

இந்த பைக்கின் விலை எக்ஸ் ஷோரூம் மதிப்பில் ரூ 7.5 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்; உங்கள் பைக்கிற்கும் மாற்றவேண்டுமா?

02.உங்கள் காரில் ஹேண்ட் பிரேக் போடவில்லை என்றால் இப்படியும் நடக்கலாம்...

03.புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

04.ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

05.ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Suzuki GSX-S750 India Launch Likely In June Or July. Read in Tamil
Story first published: Saturday, March 31, 2018, 12:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark