புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை பார்வைக்கு வைத்திருந்தது. மிரட்டலான டிசைன

By Saravana Rajan

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை பார்வைக்கு வைத்திருந்தது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

மிரட்டலான டிசைன், சக்திவாய்ந்த எஞசின் ஆப்ஷன்களுடன் பார்வையாளர்களை இந்த பைக் கவர்ந்து இழுத்தது. இந்த நிலையில், இந்த பைக் விற்பனைக்கு வருவது குறித்த தகவலை பைக் அட்வைஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

அதாவது, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பாதியில் இந்த புதிய பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளாதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களை இந்த புதிய பைக் மாடல் அதிக அளவில் பெற்றிருக்கிறது. முரட்டுத்தனத்தையும், மூர்க்க உணர்வையும் இதன் டிசைன் பிரதிபலிப்பதாக உள்ளது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

இந்த புதிய பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 81 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

பதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அப்சைடு டவுன் ஃபோர்க்குள் முன்புறத்திலும், மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்று இருக்கிறது. டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் பாதுகாப்பு வசதி அளிக்கப்படும். ஆனால், இதர மின்னணு பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் அதிகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.7 லட்சத்தையொட்டிய விலையில் இந்தியாவில் விற்பனைக்கு எதிப்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்து இந்த பைக்கின் வெற்றி வாய்ப்பு சுஸுகி கையில்தான் இருக்கிறது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை எப்போது?

டுகாட்டி மான்ஸ்ட்டர், ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், ஹோண்டா சிபிஆர் 650எஃப், கவாஸாகி இசட்900 உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களுடன் இந்த புதிய சுஸுகி பைக் நேரடியாக மோதும்.

Most Read Articles
English summary
Suzuki showcased the GSX-S750 in India at the 2018 Auto Expo in February. The Japanese company aims to strengthen its position in the middleweight performance bike segment with the launch of GSX-S750. Now, BikeAdvice reports that the Suzuki GSX-S750 will be launched in the country as early as this month or May 2018.
Story first published: Friday, April 13, 2018, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X