2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்..!!

Written By:

சுஸுகி நிறுவனம் புதிய ஜிஎஸ்எக்ஸ் - எஸ்750 நேக்கிடு ரக மோட்டார் சைக்கிளை நடைபெற்று வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

கூர்மையான மடிப்புகள், கம்பீர தோற்றம் என இந்த பைக்கின் வடிவமைப்புகள்,சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ் 1000 மாடலை பின்பற்றியே தயாராகியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

749சிசி இன்-லைன், 4 சிலிண்டர் லிக்விடு கூல்டு எஞ்சின் கொண்ட சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பைக், அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவர் மற்றும் 81 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக்கின் உதிரிபாகங்கள் பலவும் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும்.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக் கூர்மையான முன்பக்கத்தை பெற்றுள்ளது. இதில் ஒரே ஒரு முகப்பு விளக்கு, வலிமை பொறுந்திய எரிவாயு டேங் ஆகியவை உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

ஒரு ஸ்போர்ட்டி தரத்திற்கு வேண்டும் பைக்கிற்கு பிளவுப்பட்ட இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக பைக்கின் பின்பகுதி கூர்மையாக உள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கின் முன்சக்கரத்தில் உள்ள அப்-சைடு டவுன் ஃபோர்க்ஸ் மற்றம் பின்சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

அதேபோல டிஸ்க் பிரேக் இரண்டு சக்கரங்களில் வழங்கப்பட்டு இருக்க, பாதுகாப்பை கருதி ஏபிஎஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளனது.

மேம்படுத்தப்பட்ட சுஸுகி உராய்வு கட்டுப்பாட்டு கருவி இந்த பைக்கில் உள்ளது. இது ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கிற்கு ஸ்திரத்தன்மையை வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

சிகேடு பிளாட்ஃப்ராம் கீழ் வரவுள்ள இந்த பைக், முற்றிலும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக பைக்கிறான விற்பனை விலை குறையும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

2018 ஜூனில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக், கவாஸாகி இசட்900, யமஹா எம்.டி-09 மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

முன்னதாக ஹயபுசாவிற்கு பிற்கு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டும் சுஸுகியின் இரண்டாவது பெரிய பைக் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750

நடுத்தர எடைக்கொண்ட சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கிறான தயாரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், இதனுடைய விலை ரூ. 8 லட்சம் மதிப்பில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Suzuki GSX-S750 Unveiled - Expected Launch, Specifications, Features & Images. Click for Details...
Story first published: Friday, February 9, 2018, 16:28 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark