ரூ. 13.87 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த 2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள்..!!

Written By:

சுஸுகி நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட 2018 ஹயபுசா மோட்டார் சைக்கிளை ரூ. 13.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

வெறும் அழகியல் அம்சங்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பைக் புதிய நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் தோற்றங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பியர்ல் மிரா ரெட் / பியர்ல் கிளாசியர் வைட் மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் ஆகிய நிறங்களில் தற்போது 2018 சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

குறிப்பாக ஸ்பார்கிள் பிளாக் தோற்றம் கொண்ட பைக், சிவப்பு நிறத்திலான கிராஃபிக்ஸ் மற்றும் முற்றிலும் கருப்பு வண்ணம் தேர்வில் மிளர்கிறது. அதேபோல வெள்ளை நிறம் கொண்ட மாடலிலும் சிவப்பு நிற கிராஃபிக்ஸ் பணி அசரடிக்கிறது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2016ம் ஆண்டில் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜிஎஸ்எக்ஸ் 1300 ஆர் ஹயபுசா மாடலை அசெம்பிள் செய்தி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

சி.கே.டி பிளாட்பாரமின் கீழ் இந்தியாவில் விற்பனையான ஹயபுசா பைக்கை ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள தொழிற்சாலையில் சுஸுகி தயாரித்தது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 சுஸுகி ஹயபுசா பைக்கில் 1340 சிசி திறன் பெற்ற 4 சிலிண்டர் எஞ்சின் உள்லது. லிக்விடு கூல்டு டி.ஓ.ஹெச்.சி பெற்ற இந்த எஞ்சின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி பவர் மற்றும் 155 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக் துவக்க நிலையில் இருந்து 2.74 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடித்து விடும். 2018 ஹயபுசா பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 299கி.மீ.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போது விற்பனைக்கு வந்துள்ள 2018 ஹயபுசா 2018 ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த பைக்குடன் புதிய புர்க்மன் ஸ்கூட்டர் மற்றும் வி-ஸ்ட்ராம் 650 அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளும் இந்த நிகழ்வில் சுஸுகி அறிமுகம் செய்கிறது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் பல பைக் ஆர்வலர்களிடம் வரவேற்பு பெற்ற சூப்பர் பைக்காக சுஸுகி ஹயபுசா உள்ளது. 2016ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த சுஸுகி, ஹயபுசா பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்தது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதனால் இந்த பைக் சற்று விலை குறைந்து நமது நாட்டில் விற்பனையானது. தற்போது 2018 ஹயபுசா வாடிக்கையாளர்கள உற்சாகப்படுத்தும் புதிய பரிணாமத்தில் வெளிவருகிறது.

2018 சுஸுகி ஹயபுசா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்திய சந்தையில் 2018 சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் , ரூ. 19.7 லட்சம் விலையில் விற்பனையாகி வரும் கவாஸாகி இசட்.எக்ஸ்- 14ஆர் பைக்கிற்கு போட்டியாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: 2018 Suzuki Hayabusa Launched In India; Priced At Rs 13.87 Lakh. Click for Details...
Story first published: Thursday, February 1, 2018, 10:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark