சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

ஜப்பானில் உள்ள ஆலையில் சுஸுகி ஹயபுசா பைக் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

உலக அளவில் பிரபலமான சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் பின்னர் உள்ள உண்மையான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுஸுகி ஹயபுசா முதல்முறயாக வெளியுலக பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், மணிக்கு 320 கிமீ வேகத்தை எட்டிய உலகின் முதல் தயாரிப்பு நிலை மாடல் என்ற பெருமையையும் பெற்றது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இந்த பெரும் சாதனையுடன், 1999ம் ஆண்டு சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய உலகின் அதிவேக சூப்பர் பைக் என்ற பெருமையுடன் வந்ததால், உலக அளவில் பெரும் வரவேற்பையும், ரசிகர்களையும் பெற்றது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இந்த நிலையில், 2008ம் ஆண்டு சில மாற்றங்களுடன் புதிய சுஸுகி ஹயபுசா பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2016ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நடைமுறைக்கு வந்தன. இதனால், சுஸுகி ஹயபுசா அங்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

எனினும், இருப்பில் உள்ள சுஸுகி ஹயபுசா பைக்குகளை விற்பனை செய்வதற்கு, இரண்டு ஆண்டுகள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 31ந் தேதியுடன் அந்த காலக்கெடு முடிவதால், ஐரோப்பாவில் சுஸுகி ஹயபுசா விற்பனை முடிவுக்கு வருகிறது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இதனிடையே, ஜப்பானில் உள்ள ஆலையில் சுஸுகி ஹயபுசா பைக் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேநேரத்தில், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு வரையிலும், இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு நடைமுறைகள் அமலுக்கு வரும் வரையிலும் சுஸுகி ஹயபுசா பைக் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டில் அதிக விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களில் ஒன்று சுஸுகி ஹயபுசா. தனித்துவமான டிசைன் இதற்கு சல்மான்கானையும் ரசிகனாக்கியது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இந்த பைக்கில் 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் 1,340சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சாலை நிலைகளை பொறுத்து மூன்று விதமான டிரைவிங் மோடுகளில் எஞ்சினை இயக்கும் வாய்ப்பும் இந்த பைக்கில் இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

சுஸுகி ஹயபுசா பைக்கில் முன்சக்கரத்தில் பிரெம்போ காலிபர்களுடன் 310 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக உள்ளது. முன்புறத்தில் 43 மிமீ KYB இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் லிங்க் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இந்த பைக்கில் டாக்கோமீட்டர், கூலண்ட் வெப்பநிலை, எரிபொருள் அளவு மற்றும் ஸ்பீடோமீட்டர்களுக்காக 4 அனலாக் டயல்கள் உள்ளன. கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கடிகாரம், ஓடோமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர் ஆகியவற்றை வட்ட வடிவிலான எல்இடி திரை மூலமாக தகவல்களை பெறும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

இந்த பைக்கில் 21 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 266 கிலோ எடை கொண்டது. இந்தியாவில் ரூ.13. 5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
The Suzuki Hayabusa is being discontinued in Japan as per some recent reports. One of the most widely-acclaimed superbikes in the world, the Suzuki Hayabusa came into production back in 1999 and will retire on December 31st 2018; the end of a 20-year-old legacy of litre-class motorcycles.
Story first published: Monday, December 10, 2018, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X