2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக் வெளியீடு: புகைப்படங்களுடன் தகவல்கள்..!!

Written By:

2018 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி நிறுவனம் பல புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் புதியதாக சுஸுகி காட்சிப்படுத்தியிருக்கும் பைக் வி-ஸ்ட்ராம் 650.

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

முழு அளவிலான அட்வென்ச்சர் டூரர் வகை மோட்டார் சைக்கிளான இது 650 மற்றும் 650 எக்ஸ்.டி என இரண்டு வித வேரியன்டுகளில் காட்சிக்கு வந்துள்ளது.

சர்வதேச நாடுகளில் அட்வென்ச்சர் பைக்குகள் பிரபலமான உள்ளன. அதை இந்தியாவிலும் உருவாக்கும் நோக்கில் தான் வி-ஸ்ட்ராம் 650 பைக் நம் நாட்டில் களமிறங்குகிறது.

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ள சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 எப்போது விற்பனைக்கு வரும் என தெரியவில்லை.

இருந்தாலும் ஆட்டோ எக்ஸ்போ வட்டாரங்களிலிருந்து நமக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் இந்த பைக் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளிவரலாம் என தெரிகிறது.

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

எஸ்.வி. 650 பைக்கில் உள்ள அதே எஞ்சின் தான் வி-ஸ்ட்ராம் பைக்கில் உள்ளது. இதனால் செயல்திறன் நிச்சயம் வெளுத்து வாங்கும் என்பது உறுதி.

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக்கில் 645சிசி வி-ட்வின் எஞ்சின் உள்ளது. இது 70 பிஎச்பி பவர் மற்றும் 62.3 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். தவிர இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

சஸ்பென்ஷன் தேவையில் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன் சக்கரத்தில் உள்ளது, அதேபோன்று பின்சக்கரத்தில் மோனோ-ஷாக் அப்ஸபர்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் தேவைகளில் சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக்கின் முன் சக்கரத்தில் 310மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக் ஏபிஸ் உடன் உள்ளது

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

ஆஃப் ரோடு தேவைகளை கருத்தில் கொண்டு இந்த பைக் ட்வின் - ஸ்ப்ரே அலாய் ஃபிரேமில் அமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்.டி வெர்ஷன் பைக்கில் வையர்-ஸ்போக் ரிம்ஸ் உள்ளது.

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

மேலும் வி-ஸ்ட்ராம் பைக்கில் விண்டுஸ்க்ரீன் உயரத்தை மூன்று விதங்களில் மாற்றி அமைக்கும் வசதி, 3 அடுக்கு உராய்வு கட்டுப்பாட்டு அமைப்பு, சுஸுகிக்கே உரித்தான எளிதான முறையில் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. இதே அம்சங்கள் வி-ஸ்ட்ராம் 1000 வெர்ஷனிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுஸுகி 2018 வி-ஸ்ட்ராம் 650 பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

இந்தியாவில் கவாஸாகி வெர்சிஸ் 650 மாடலுக்கு சரிநிகர் போட்டியாக சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக் களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கில் விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

English summary
Read in Tamil: Suzuki V-Strom 650 Showcased - Expected Launch Date & Price, Specifications, Images. Click for Details...
Story first published: Friday, February 9, 2018, 12:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark