தமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

டாடா நிறுவன ஓப்புதலுடன் கோவையை சேர்ந்த நிறுவனம் சா்ரபில் டாடாட நேனோ எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் முதற்கட்டமாக ஓலா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

By Balasubramanian

டாடா நிறுவன ஓப்புதலுடன் கோவையை சேர்ந்த நிறுவனம் சா்ரபில் டாடாட நேனோ எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் முதற்கட்டமாக ஓலா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் குறைந்த விலையில் மக்கள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

கோவையை மையமாக கொண்டு இயங்கும் ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் புதிய ஜெயம் நியோ எலெக்ட்ரிக் டாடா நேனோ என்ற காரை கடந்த பிப்., நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தினர். இந்த காரை அந்நிறுவனம் டாடா மோட்டார் குழுமத்துடன் இணைந்து தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

அதன் படி ஜெயம் நிறுவனம் டாடா நிறுவனத்திடம் இருந்து டாடா நேனோ காரின் பாடி ஷேல்லை வாங்கி அதனுடன் தங்கள் தயாரித்த மற்ற அண்டர் ஹூட் பாகங்களை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

முற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த காரில் 40 வோல்ட் எலெக்ட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 23 எச்பி மோட்டாருடன் ஒரு முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் வரை இயங்கும் திறன் கொண்டது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

இந்த கார் முதற்கட்டமாக கேப் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க ஜெயம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமான ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்காக 400 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

தற்போது இந்த கார்களை ஐதராபாத்தில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓலா கார்களுக்கு என தனி கலர் வண்ணங்களான வெள்ளை மற்றும் பச்சை கலரில் தான் இந்த காரின் பாடியும் அமைக்கப்பட்டுள்ளது. இது பலே நிறுவனங்கள் ஓலாவிற்கு கார்களை வழங்கியுள்ளது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

இந்த காரில் டாடா நிறுவனத்தின் நேரம் பேட்ஜ் இல்லை. ஜெயம் நிறுவனத்தின் பேட்ஜ் தான் உள்ளது. ஜெயம் நிறுவனம் தான் இந்த காரை முழுமையாக தயாரித்து விற்பனை செய்கிறது. டாடா நிறுவனம் இந்த காருக்கான பாடி ஷேல்லை மட்டுமே வழங்குகிறது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

இந்த புதிய ஜெயம் நியோ எலெக்ட்ரிக் காரில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், ஏசி, முன்பக்க கதவுகளில் பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ப்ளூடூத் ஆகிய வசதிகள் இருக்கிறது. மேலும் அக்ஸ் இன், மல்டி இன்போர்மேஷன் டிஸ்பிளே மற்றும் 12 வோல்ட் பவர் சாக்கெட் இருக்கிறது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

இந்த காருக்கான பவர் டிரைன் எலெக்ட்ரா இவி என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் தான் டிகோர் மற்றும் டியாகோ ஆகிய கார்களுக்கான எலெக்டரிக் டிரைவ் சிஸ்டத்தை வழங்குகின்றனர்.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

தமிழகத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் பல பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களுக்கு இணையான கார்களை வெற்றிகரமான தயாரித்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

ஏற்கனவே ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெங்களூரு, கோவை, கரூர், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் காரிடாராக அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பல ஆட்டோ மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

இதன் மூலம் தமிழக இளைஞர்கள் ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கோவையை சேர்ந்த நிறுவனம் ஒன்று எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை தயாரித்துள்ளது.

தமிழர்கள் தயாரிக்கும் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

சமீபத்தில் வெளியாகும் செய்திகள் தமிழகத்தில் கொங்கு மண்டல பகுதிகள் அதிக அளவில் ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

Source: Autocarindia

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
kovai company producued tata nano, Ola got 400 units. Read in Tamil
Story first published: Tuesday, June 19, 2018, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X