ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்; உங்கள் பைக்கிற்கும் மாற்றவேண்டுமா?

இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ்.சை ஏப்.1ம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது.

By Balasubramanian

ஐரோப்பிய நாடுகள், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் டூவீலர்களில் ஏ.பி.எஸ். கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. அது போல இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ்.சை ஏப்.1ம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

அதன் படி இந்தியாவில் ஏப். 1ம் தேதிக்கு பிறகு அறிமுகம் செய்யப்படும் 125 சிசிக்கு அதிகமாக பைக்குகளுக்கும், ஸ்கூட்டர்களுக்கும் ஏ.பி.எஸ் அல்லது சி.பி.எஸை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

கடந்த 2012ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 36 ஆயிரம் பேர் டூவீலர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இதை குறைக்கவே அரசு ஏ.பி.எஸ்.ஐ. கட்டாயாமாக்கியுள்ளது.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

இதன் காரணமாக இனி அறிமுகமாகும் பைக்குளின் விலை எதிர்பார்த்ததை விட சற்று அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனினும் இது சாதாரண பிரேக்கை விட அதிக அளவு பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

இந்த உத்தரவு என்பது பைக், ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு தான். ஏப். 1ம் தேதிக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் பைக்குகளுக்கு மட்டுமே ஏ.பி.எஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்களிடம் உள்ள பைக்கிலோ, ஸ்கூட்டரிலோ ஏ.பி.எஸ். இல்லை என்றால் நீங்கள் ஏ.பி.எஸை மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

அதே நேரத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் ஏ.பி.எஸ்., இல்லாத பைக்குகளையும் ஏ.பி.எஸ். இல்லாமலேயே ஓட்ட அனுமதியுள்ளது. இந்த உத்தரவு என்பது ஏப்.1க்கு பிறகு அறிமுகமாகும் பைக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

ஏபிஎஸ் என்றால் என்ன?

ஏபிஎஸ் என்பதன் விரிவாக்கம் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம். இந்த தொழிற்நுட்பம் பொறுத்தப்பட்ட பைக்கில் நாம் செல்லும் போது பிரேக் பிடித்தால் அது நாம் செல்லும் ரோடு, நாம் கொடுக்கும் பிரேக் அழுத்ததின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு நாம் பைக்கில் இருந்து கீழே விழாதவாறு, பைக் ஸ்கிட் ஆகாதவாறு பிரேக் பிடிக்கும்.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

இதே நேரத்தில் சாதாரண பிரேக் தொழிற்நுட்பம் உள்ள வண்டியில் செல்லும் போது பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று நிற்குமோ அதற்கும் குறைவான தூரத்திலேயே ஏபிஎஸ் தொழிற்நுட்பம் பைக்கை நிறுத்திவிடும்.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

இந்த தொழிற்நுட்பத்தால் டூவிலர் விபத்துக்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும். அதே நேரங்களில் மோசமான ரோடுகளால் பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுதல் போன்ற விபத்துக்கள் நடக்காது.

ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்

இதனால் ஆண்டுதோறும் டூவிலர் விபத்துகளின் பலியாவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என அரசு எதிர்பார்த்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
The government of India has made ABS compulsory for all bikes by April. Read in Tamil
Story first published: Friday, March 30, 2018, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X