பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட அதிக வசதிகள், அம்சங்களுடன், குறைந்த செலவுகளுடன் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்து விட்டன. மக்கள் தங்கள் பெட்ரோல் ஸ்கூட்டரை மாற்ற நினைத்தால் கண்டிப

By Balasubramanian

இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட அதிக வசதிகள், அம்சங்களுடன், குறைந்த செலவுகளுடன் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்து விட்டன. மக்கள் தங்கள் பெட்ரோல் ஸ்கூட்டரை மாற்ற நினைத்தால் கண்டிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறலாம். இவ்வாறு மாறுவதற்கான சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்திய மக்கள் மத்தியில் சமீபகால மாக் ஸ்கூட்டர் மீது உள்ள மோகம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இவ்வளவு ஏன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்கும் ஹோண்டா ஆக்டிவா என்ற ஸ்கூட்டர் தான். இந்தியர்கள் ஸ்கூட்டர் பக்கம் வர பல காரணங்கள் இருக்கின்றன. ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கிறது. எடையும் குறைவாக இருக்கும்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

மேலும் இந்தியாவில் பெருகி வரும் டிராப்பிக்கிற்கு ஸ்கூட்டர் தான் சிறந்த வழியாக மக்கள் மனதில் பதித்து விட்டது. ஆனால் ஸ்கூட்டருக்கும் பைக்கிற்கும், விலை, மைலேஜ், பராமரிப்பு என எல்லாம் ஒரே செலவில் தான் உள்ளன. இதற்கிடையில் இந்தியா தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. இந்த வகையில் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட்டியாக பல ஆப்ஷன்களுன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வந்துவிட்டன.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

நீங்கள் உங்களிடம் உள்ள பெட்ரோல் ஸ்கூட்டர்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றினால் உங்களுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும் இந்த வகையில் இந்தியாவில் விற்பனையாக பல்வேறு ஆப்ஷன்கள் கொண்ட டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இங்கு பார்ப்போம்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

ஒகினாவா

ராஜஸ்தான் மாநிலத்தை தலைமையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான் ஒகினாவா, இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் ப்ரைஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 59,899 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 22 மாநிலங்களில் 142 நகரங்களில் 200 விற்பனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கு ரூ 2000 முன் பணமாக கொடுத்து இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டரில் பகல் நேர எல்இடி லைட்களுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், அன்டி தெப்ட் அலாரம், கீ லெஸ் என்ட்ரி, பைன்ட் மை ஸ்கூட்டர் ஆப்ஷன், ஆகிய அம்சங்கள் உள்ளன. இது தற்போது விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டரில் கூட இவ்வளவு ஆப்ஷன்கள் இல்லை.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

மேலும் இந்த ஸ்கூட்டரில் எக்கானமி, ஸ்போர்ட், டர்போ ஆகிய டிரைவிங் மோடுகள் உள்ளன. இதை பயன்படுத்தி நீங்கள் வேகமாகவும் மெதுவாகவும் செல்லலாம்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த பைக்கில் பிரஷ்லெஸ் டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை லெட் ஆசிட் பேட்டரி அல்லது லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. லெட் ஆசிட் பேட்டரி 6-8 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும், லித்தியம் இயான் பேட்டரி 1 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் ஆகி விடும். இந்த பைக் 3.4 பிஎஸ் பவர் மற்றும் 18-40 என்எம் டார்க் திறனை வழங்கும்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டர் எக்கானமி மோடில் 35 கி.மீ. ஸ்பீடிலும், ஸ்போர்ட் மோடில் 60 கி.மி ஸ்பீடிலும், டர்போ மோடில் 75 கி.மி. ஸ்பீடிலும் அதிக பட்ச ஸ்பீடாக செல்லும், நீங்கள் பயன்படுத்தும் டிரைவ் மோட்டிற்கு ஏற்ப பேட்டரி குறையும் நேரம் மாறுபடும். முழு பேட்டரி சார்ஜ் செய்தால் சுமார் 170-200 கி.மீ. வரை பயணம் செய்யலாம் என் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்தி ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் கேஸ் ஏற்றப்பட்ட டெலஸ்கோபிக் ஃப்போக்ஸ், பின் பக்கம் இரண்டு ஷாக் அப்ஷர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முதன் முறையாக முன் பக்க வீலில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின் பக்கம் ஒரு டிஸ்க் பிரேக் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீலுடன் 90/90 டியூப் லெஸ் டயர்களுடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை 150 கிலோ.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

ஹீரோ எலெக்ட்ரிக் போத்தான் லி

ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த போத்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை டில்லி எக்ஸ் ஷோரூமின் படி ரூ 52,790 என மதிப்பிடப்பட்டுள்ளுது. இந்த ஸ்கூட்டர் லித்தியம் இயான், மற்றம் ஏஜிஎம் விஆர்எல்ஏ ஆகிய இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த பைக் அதிக பட்சமாக 45 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டர் அதிக பட்சமாக பவர் மோடில் 65 கி.மீ., மைலேஜூம், எக்கானமி மோடில் 85 கி.மீ. மைலேஜூம் கிடைக்கிறது. இதில் 1500 வாட்ஸ் பவர் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மல்டி ஸ்டேஜ் ஹெவி டியூட்டி சார்ஜர் வழங்கப்படுகிறது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

சஸ்பென்ஸனை பொருத்தவரை, முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கம் மோனோ ஷாக் அப்ஷர்பர்களும் இருக்கிறது. முன்பக்க வீல் 10 இன்ச் விட்டத்துடன் டிஸ்க் பிரேக்களுடன் உள்ளது. இந்த பைக்கிற்கு ஹீரோ பிராண்டிங் இருப்பதால் இதற்கு இந்தியா முழவதும் டீலர்கள் இருக்கின்றனர். இதனால் இந்த ஸ்கூட்டர் விற்பனை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

ஹீரோ எலெக்ட்ரிக் என்ஒய்எக்ஸ் இ5

ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஹீரோ எலெக்ட்ரிக் என்ஒய்எக்ஸ் இ5 இந்த ஸ்கூட்டர் டில்லி எக்ஸ் ஷோரூம்விலைப்படி ரூ 55,490 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 250 வாட்ஸ் பிடிஎல்சி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் லித்தியம் இயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் ஏற 4 மணி நேரம் வரை ஆகும். முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டர் சுமார் 60 கி.மீ வரை பயணம் செய்யலாம். ஆனால் இந்த ஸ்கூட்டர் 25 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லக்கூடியது. இதில் அன்டி தெப்ட் அலாரம், 2 வருட வாரண்டி, ஒரு வருட ரோடு சைடு அசிஸ்டன்ட்ஸ் பிளான், ஆகிய வசதிகள் உள்ளது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

ஏத்தர் எஸ் 340

ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர் வரும் ஜூன் மாதம் முதல் புக்கிங்கை துவங்குகிறது. முதற்கட்டமான இந்த ஸ்கூட்டரை பெங்களூருவில் மட்டும் விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டரில் 7 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, பார்க் அசிஸ்டன்ட், நெவிகேஷன் அசிஸ்டன், சார்ஜிங் பாயிண்ட் டிராக்கர், உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட்டிற்கு கீழ் பகுதியில் உள்ள ஸ்ரேஜில் எல்இடி லைட், ஆகிய வசதிகள் உள்ளன.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டர் 2.2 கிலோ வாட் லித்தியம் இயான் பேட்டி கொண்டது. இந்த பேட்டரி சுமார் 50,000 கி.மீ. வரை லைப் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் 80 சதவீத சார்ஜ் 1 மணி நேரத்தில் ஏறிவிடும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 60 கி.மீ. வரை செல்லலாம். இந்த பைக்கின் அதிகபட்ச வேகமாக 72 கி.மீ. வேகத்தில் செல்லும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

மேலும் இந்த ஸ்கூட்டரில் 0-40 கி.மி வேகத்தை 5.1 நொடிகளில் பிக்கப் செய்துவிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 6.8 பிஎஸ் பவர்,14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃப்போக்ஸ், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஸன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்களுடன் சிபிஎஸ் ஆபஷனும உள்ளது. மேலும் வீல் ஹை டென்ஸில் ஸ்டீல் அலாய் வீல்களால் ஆனாது. தற்போது இந்நிறுவனம் பெங்களூருவில் 30 இடங்களில் சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவியுள்ளது. இந்த மாதம் இந்த மையங்கள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 4 கிமீ தொவிலும் ஒரு சார்ஜ் ஏற்றும் மையம் இருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இதனால் இந்த ஸ்கூட்டரை சிட்டிக்குள் பயன்படுத்த எந்த வித தடையும் இருக்காது என நம்பப்படுகிறுது. இந்த பைக்கின் விலை சுமார் ரூ 75,000 விற்பனைக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

டுவென்டி டூ மோட்டார் பிளோ

டுவென்டி டூ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. தற்போது ஏற்கனவே புக் செய்யப்பட்ட ஆர்டர்களுக்கான வாகனங்களை தயாரித்து டெலிவரி செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டரை நீங்கள் ஆன் லைனில் மட்டுமே புக் செய்து வாங்க முடியும். இந்த பைக்கிற்காக எந்த ஷோரூமும் இல்லை.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டரின் விலை டில்லி எக்ஸ் ஷோரூமின் படி ரூ 74,740, இந்த ஸ்கூட்டரில் ரிமோட் டிராக் வெகிக்கில், மொபைல் ஆப் மூலம் பவர் சப்ளை கட், ஆகிய வசதிகள் உள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள டிசி மோட்டார். 2.8 பிஎஸ் பவரையும் 100 ஆர்.பி.எம்மில் 90 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும். இதில் லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 2 மணி நேரத்தில் 70 சதவீத சார்ஜை பெற்று விடும். ஆனால் 100 சதவீத சார்ஜ் ஏற 4 மணி நேரம் ஆகும்.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த பைக்கை 10 நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே 20 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும். முழு சார்ஜில் சுமார் 80 கி.மீ. வரை பயணம் செய்யலாம். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில்செல்லக்கூடியது. அது மட்டுமில்லாமல் இந்த ஸ்கூட்டரில் சர்வீஸ் ரிமைன்டர், விபத்து அலார்ட் என பல வசதிகள் உள்ளன.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

இந்த ஸ்கூட்டரில் தனித்துவ அம்சமாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் மோட் பார்க்கிங் அம்சம், ஆகிய வசதிகள் உள்ளது. இந்த பைக்கின் எடையும் 85 கிலோ தான். ஆனால் 150 கிலோ வரை எடை தாங்கும். சீட்டிற்கு கீழ் பகுதியில் 25 லிட்டர் அளவு கொண்ட பொருட்கள் வைக்கும் பெட்டி உள்ளது. சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பகம் டெலஸ்கோபிக் சன்பென்ஸன் உள்ளது. இன் பக்கம் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்ட

மேலே உள்ள ஸ்கூட்டர்கள் பல தற்போது விற்பனையாகி வரும் பெட்ரோல் ஸ்கூட்டர்களை காட்டிலும் அதிக வசதிகளும் உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர்கள் பெட்ரோல் ஸ்கூட்டரை காட்டிலும், குறைந்த அளவு செலவே ஆகும். உங்களது தேவை இந்த எலெக்டரிக் ஸ்கூட்டரில் கிடத்துவிட்டால் நீங்கள் தாராளமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறலாம்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதகிம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Top 5 Electric Scooters That Can Replace Your Petrol Scooter. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X