ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கும் டாப் - 15 ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களும், கான்செப்ட் வடிவிலான இருசக்கர வாகனங்களும் பொது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அதில், எம்மை கவர்ந்த டாப்- 15 பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. ஹோண்டா எக்ஸ்- பிளேடு

01. ஹோண்டா எக்ஸ்- பிளேடு

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் எல்லோரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மிக அசத்தலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய பைக் 160சிசி பைக் மார்க்கெட்டில் சற்றே உயர்ரக மாடலாக வருகிறது. முழுவதுமான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கின் 162.7சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 13.93 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கில் இருக்கும் அதே டைமண்ட் ஃப்ரேமில்தான் இந்த பைக்கும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. யமஹா எஃப்இசட், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, பஜாஜ் பல்சர் என்எஸ்160 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். அடுத்த மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.75,000 எக்ஸ்ஷோரூம்

02. யமஹா ஆர்-15 வி3.0

02. யமஹா ஆர்-15 வி3.0

இந்திய இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் யமஹா ஆர்15. இதன் மூன்றாம் தலைமுறை மாடல், ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆர்15 வி3.0 பைக் பல்வேறு டிசைன் மாற்றங்களை சந்தித்துள்ளது. புதிய ஹெட்லைட், புதிய ஃபேரிங் பேனல்கள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த பைக்கில் 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.03 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றம்.

விலை: ரூ.1.25 லட்சம் எக்ஸ்ஷோரூம்

03. ஹோண்டா ஆக்டிவா 5ஜி

03. ஹோண்டா ஆக்டிவா 5ஜி

ஆட்டோ எக்ஸ்போவில் பலரின் கவனத்தையும் ஈர்த்த மாடல் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர். புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், பொசிஷன் லைட்டுகள், புதிய அனலாக்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை புதிது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் இருக்கும் 109.19சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.53,000 எக்ஸ்ஷோரூம்

04. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

04. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற புதிய 125 ஸ்கூட்டர் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்தியாவின் 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதன்மை வகிக்கும் சுஸுகி நிறுவனம், சந்தைப் போட்டி அதிகரித்து வருவதையடுத்து, சற்று வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த மாடலை களமிறக்க உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த புதிய ஸ்கூட்டரில் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரில் இருக்கும் அதே 125சிசி எஞ்சின்தான் பயன்படுத்தப்படும். இந்த ஸ்கூட்டரில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புற தோற்றம் மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்கள் போன்று பிரம்மாண்டமாக இருப்பது இதன் மீதான கவனத்தை ஈர்க்கும் அம்சம். இந்த ஆண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.65,000 எக்ஸ்ஷோரூம்

 05. அப்ரிலியா எஸ்ஆர் 125

05. அப்ரிலியா எஸ்ஆர் 125

ஆட்டோ எக்ஸ்போ மூலமாக விற்பனைக்கு வந்திருக்கும் புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டர் கவனத்தை வெகுவாக ஈர்ப்பதாக உள்ளது. ஏற்கனவே அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதனைவிட குறைவான விலையில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத் தோற்றத்தில் சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

புதிய அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்ஸகூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.46 பிஎச்பி பவரையும், 8.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் இடம்பெற்றிருக்கிறது. டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா க்ரேஸியா மற்றும் விரைவில் வரும் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

விலை: ரூ.65,310 எக்ஸ்ஷோரூம்

06. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

06. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் மிக முக்கிய மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. மேஸ்ட்ரோ 110 ஸ்கூட்டரைவிட பல கூடுதல் சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த புதிய ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரில் ஹீரோ ஐ3எஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். எல்இடி டெயில் லைட், அனலாக்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ஸட்டர் மற்றும் வெளிப்புறத்திலிருந்து எரிபொருள் நிரப்பும் வசதி ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.56,000 எக்ஸ்ஷோரூம்

07. அப்ரிலியோ டுவானோ 150/ஆர்எஸ் 150

07. அப்ரிலியோ டுவானோ 150/ஆர்எஸ் 150

ஆட்டோ எக்ஸ்போவில் பெரிதும் கவர்ந்த மாடல்களாக அப்ரிலியா டுவானோ 150 மற்றும் ஆர்எஸ் 150 ஆகியவை மாறி இருக்கின்றன. அப்ரிலியா நிறுவனம் இந்தியாவின் பிரிமியம் மார்க்கெட்டில் இருந்து இப்போது பட்ஜெட் இருசக்கர வாகன மார்க்கெட்டை குறிவைத்து காய் நகர்த்தி வருவது இந்த புதிய பைக் மாடல்கள் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்ரிலியா நிறுவனத்தின் பிரபலமான டுவானோ வி4 மற்றும் ஆர்எஸ்வி4 ஆகிய உயர்வகை பைக் மாடல்களின் திறன் குறைவான எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய மாடல்கள் வர இருக்கின்றன. டிசைன் மிகவும் கவரும் வகையில் இருப்பது பெரிய பலம்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

அப்ரிலியா டுவானோ 150 நேக்கட் எனப்படும் திறந்த உடல் அமைப்பு கொண்ட மாடலாகவும், ஆர்எஸ்150 ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் வடிவமைப்பை பெற்றிருக்கின்றன. இந்த இரு பைக்குகளிலும் 150சிசி லிக்யூடு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அட்டகாசமான டிசைன் இதற்கு பலம் சேர்க்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

எதிர்பார்க்கும் விலை: ரூ.1.5 லட்சம் எக்ஸ்ஷோரூம்

08. ஹோண்டா சிபிஆர் 250ஆர்

08. ஹோண்டா சிபிஆர் 250ஆர்

ஆட்டோ எக்ஸ்போவில் பெரிதும் கவரும் மாடல்களில் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் மாடலும் ஒன்று. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், புதிய வண்ணங்கள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கியமானது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் இருக்கும் 249.6சிசி சிங்கள் சிலிண்டர்ர் எஞ்சின் அதிகபட்சமாக 26பிஎச்பி பவரையும், 22.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. யமஹா ஃபேஸர் 25 மற்றும் கேடிஎம் ஆர்சி200 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம்

09. புதிய யமஹா ஆர்3

09. புதிய யமஹா ஆர்3

புதிய யமஹா ஆர்3 பைக் ரூ.3.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில்புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் புதிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை பிரிவு ஹெட்லைட் அமைப்பு தக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டாப்- 10 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

புதிய யமஹா ஆர்3 பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 321சிசி எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் பாரத் ஸ்டேஜ்- 4 மாசு உமிழ்வு தர அம்ச்த்துடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300, பெனெல்லி 302ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

10. யுஎம் ரெனிகேட் ட்யூட்டி

10. யுஎம் ரெனிகேட் ட்யூட்டி

ஆட்டோ எக்ஸ்போவில் அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம் அதிரடி காட்டி இருக்கிறது. யுஎம் ரெனிகேட் ட்யூட்டி என்ற பிராண்டில் இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் ஆகிய இந்த மாடல்கள் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் மிக சவாலான விலையில் வந்துள்ளன. இந்த பைக் மாடல்களில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

யுஎம் ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் பைக்குகளில் 223சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பஜாஜ் அவென்ஜர் மற்றும் சுஸுகி இன்ட்ரூடெர் 150 மாடல்களுக்கு கடும் போட்டியை தரும்.

11. எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்

11. எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்

ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஃப்ளக்ஸ் ஒன் என்ற இந்தியாவின் முதல் மின்சார சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மிக உயரிய வகையிலும், பெட்ரோல் எஞ்சின் கொண்ட பைக் மாடல்களுக்கு சவால் தரும் விதத்திலும் இருக்கின்றன. இந்த பைக்கின் பேஸ் மாடல் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஓலின்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் கார்பன் ஃபைபர் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடல் ரூ.11 லட்சம் விலையிலும் வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த பைக்கில் திரவ குளிர்விப்பு அமைப்பு கொண்ட 3 பேஸ் ஏசி இன்டக்ஷன் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 80.4 பிஎச்பி பவரையும், 71 பிஎச்பி பவரையும் வழங்கும். இந்தியாவில் 199 பைக்குகளும், வெளிநாடுகளில் 300 பைக்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

12. டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் கான்செப்ட்

12. டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் கான்செப்ட்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஸெப்லின் க்ரூஸர் ரக பைக் கான்செப்ட் பெரிதும் கவரும் வகையில் இருக்கிறது. மிக அட்டகாசமான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், க்ரூஸர் மார்க்கெட்டில் பெரிய அளவு வரவேற்பை பெறும்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த பைக்கின் டிசைன் மட்டுமல்ல, தொழில்நுட்பங்களும் சிறப்பாக இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றிருக்கும் இன்டக்ரடேட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மூலமாக ஆரம்ப நிலையில் எஞ்சினுக்கு கூடுதல் திறன் அளிக்கும் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இது மட்டுமின்றி, ரீஜெனரேட்டிவ் அசிஸ்ட் மோட்டார் மூலமாக தேவைப்படும்போது 20 சதவீதம கூடுதல் டார்க் திறனை பெறும் நுட்பமும் உள்ளது. இந்த கான்செப்ட் தயாரிப்புக்கு கொண்டு செல்லப்படுவது குறித்த தகவல் இல்லை.

13. ஹீரோ எக்ஸ்பல்ஸ்

13. ஹீரோ எக்ஸ்பல்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இம்பல்ஸ் 150சிசி சாகச ரக பைக் மாடலுக்கு மாற்றாக வர இருக்கிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் சாகச ரக பைக்களுக்கு தேவையான பல ஆக்சஸெரீகள் இடம்பெற்று இருக்கின்றன. லாங் டிராவல் சஸ்பென்ஷன், லக்கேஜ் ராக், கைகளை பாதுகாக்கும் நக்குள் கார்டு உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

ஹீரோ இம்பல்ஸ் பைக்கில் 150சிசி எஞ்சின் இருந்த நிலையில், இந்த பைக்கில் 200சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 200சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும்,17.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் டர்ன் - பை - டரன் நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.1.2 லட்சம் எக்ஸ்ஷோரூம்

14. பிஎம்டபிள்யூ எஃப் 750 மற்றும் 850 ஜிஎஸ்

14. பிஎம்டபிள்யூ எஃப் 750 மற்றும் 850 ஜிஎஸ்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இரண்டு புதிய சாகச ரக பைக் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எஃப் 750ஜிஎஸ் மற்றும் எஃப் 850ஜிஎஸ் ஆகிய மாடல்கள்தான் இப்போது களமிறக்கப்பட்டு இருக்கின்றன. பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக் ரூ.12.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பிஎம்டபிள்யூ எஃப் 850ஜிஎஸ் பைக் ரூ.13.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த பைக்கில் 853சிசி பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 92 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த இரு மாடல்களும் மோனோகாக் சேஸீயில் கட்டப்பட்டு இருக்கின்றன. ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் மாடலுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

15. டிவிஎஸ் க்ரையன் கான்செப்ட்

15. டிவிஎஸ் க்ரையன் கான்செப்ட்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் டிவிஎஸ் க்ரையன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் பார்ப்போரை கவர்ந்து இழுத்து வருகிறது. மிக அட்டகாசமான டிசைனில் சிறப்பான வண்ணக் கலவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மின்சார மார்க்கெட்டில் வந்தால் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 15 பைக்குகள மற்றும் ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டரில் 12kW திறன் கொணம்ட மின் மோட்டாரும், லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மணிநேரத்தில் இதன் பேட்டரி 80 சதவீதம் சார்ஜ் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் பயணிக்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப்- 15 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் மேற்கண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் தவிர்த்து, யுஎம் ரெனிகேட் தோர் எலக்ட்ரிக் பைக், ஹோண்டா பிசிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவையும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Most Read Articles
English summary
Here we bring you the top best bikes, scooters and concepts from Auto Expo 2018.
Story first published: Sunday, February 11, 2018, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X