ரூ. 11.12 லட்சம் விலையில் 2018 டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

ரூ. 11.12 லட்சம் விலையில் 2018 டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Azhagar

இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் 2018 போனேவில்லே ஸ்பீடுமாஸ்டர் மோட்டார் சைக்கிள் ரூ. 11.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

கடந்தாண்டு ரூ. 9.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் டிரையம்ப் நிறுவனம் வெளியிட்ட போனவில்லே பாபர் பைக்கை தழுவி இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ப் நிறுவனம் போனேவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக்கை சிகேடி பிளாட்ஃப்பார்மில் உருவாக்கியுள்ளது. அதன் காரணமாக இதனுடைய விலையில் 5 சதவீதம் கூட்டப்பட்டுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

முன்னர் வெளியான பாபர் பைக் நகர்புற சூழ்நிலைக்கான வாகனமாக தயாராகியுள்ள நிலையில், ஸ்பீடுமாஸ்டர் பைக் வளைந்த கைப்பிடிப்புகள், சவாரி செய்ய வசதியாக ஃபார்வேர்டு-செட் ஃபூட்ஸ்டெப்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

மேலும் போனவில்லே பாபர் பைக்கிலிருக்கும் அதே 1200சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் தான் இந்த டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக்கில் உள்ளது.

இது அதிகப்பட்சமாக 76 பிஎச்பி பவர் மற்றும் 106 என்.எம் டார்க் திறனை வழங்கும். எஞ்சினின் சரியான செயல்பாட்டிற்காக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

செயல்திறன் என்றில்லாமல், போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் சேஸிஸ், ஸ்விங்ஆர்ம் மற்றும் சஸ்பென்ஷன் தேவைகளையும் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் பகிர்ந்துக்கொண்டுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 2 பிஸ்டன் பிரம்போ கேலிபர்கள் பெற்ற 310 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. தொடர்ந்து ரியர் சக்கரத்தில் நிஸான் கேலிபர் பெற்ற 255 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ரைடு-பை-வயர் தொழில்நுட்பத்தில் இயங்கும் 2018 டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் மோட்டார் சைக்கிள் எல்.இ.டி முகப்பு விளக்குகள், ஏபிஸ், மாற்றும் திறன் கொண்ட உராய்வு கட்டுப்பாடு,

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

எஞ்சின் இம்பொலைஸர், அனலாக் ஸ்பீடோமீட்டர், எல்.சி.டி மல்டி-இன்ஃபோ டிஸ்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், 2 ரைடிங் மோட்ஸ் மற்றும் டார்க் அசிஸ்ட் பெற கிளட்ச் போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ், ரியர் மோனோ-ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. 12 லிட்டர் எரிவாயு டேங்க் கொள்ளவு கொண்ட இந்த பைக் நெடுந்தூர பயணத்திற்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

செயல்திறன், வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், கட்டமைப்பு போன்ற எல்லா தேவைகளில் சிறப்பான தயாரிப்பாக உள்ள போனேவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் லிட்டருக்கு 27 கி.மீ மைலேஜ் தரும் என டிரையம்ப் தெரிவித்துள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மற்றும் இந்தியன் ஸ்கௌட் சிக்ஸ்டி போன்ற் அபைக்குகளுக்கு போட்டியாக இது தயாராகியுள்ளது.

மேவரிக் மற்றும் ஹைவே என்ற இரண்டு வித கிட்டுகள் மற்றும் 100 கஸ்டமைஸ் ஆக்சரீஸ்கள் இந்த பைக்கிற்காக வழங்கப்படுகின்றன.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

கிரான்பெர்ரி ரெட், ஜெட் பிளாக் மற்றும் ஃபியூஷன் பிளாக், ஃபான்டம் வைட் ஆகிய நிறங்களில் டிரையம்ப் போனேவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் கிடைக்கிறது. மேலும் இந்த பூச்சு வேலை அனைத்தும் கையாலேயே செய்யப்பட்டுள்ளது.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் இயங்கும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் சும்லி பேசும்போது, இந்தியாவில் சிறந்த பைக் பயன்பாட்டை அனுபவிக்க ஏதுவாக போனேவில்லே ஸ்பீடுமாஸ்டர் மாடலை தயாரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தொடர்ந்து இதுபோன்ற கட்டமைப்பில் பைக் உருவாக்க பணிகள் தொடங்கும் என்றும், அதை நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என விமல் சும்லி கூறியுள்ளார்.

டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ப் நிறுவனம் என்ட்ரி-லெவல் க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள்களில் டிரையம்ப் போனவில்லே ஸ்பீடுமாஸ்டர் முக்கிய தயாரிப்பாக உள்ளது.

சிறந்த கட்டமைப்புகளை கொண்டுள்ள இந்த பைக் சந்தையில் சிறப்பான போட்டியை அதிகரிக்க தகுந்த விலையில் வெளிவந்துள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: 2018 Triumph Bonneville Speedmaster Launched At Rs 11.12 Lakh In India. Click for Details...
Story first published: Tuesday, February 27, 2018, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X