டெஸ்ட் டிரைவின் போது கண்ணில் பிடிப்பட்ட 125சிசி டிவிஎஸ் கிராஃபைட் கான்செப்ட் புதிய ஸ்கூட்டர்..!!

Written By:

இந்தியாவில் டிவிஎஸின் 125சிசி திறன் பெற்ற புதிய ஸ்கூட்டர் மீண்டும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கிராஃபைட் கான்செப்ட் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

தற்போது வெளியான புதிய அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கிற்கான விளம்பரப் பணிகளில் டிவிஎஸ் மும்முரமாக உள்ளது.

இதுபுறமிருந்தாலும், புதிய வாகனங்களை உருவாக்கும் பணியும் மறுபுறம் தீவிரமாகவுள்ளது. அங்குதான் இந்த செயல்திறன் மிக்க ஸ்கூட்டர் தயாராகி வருகிறது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

2014 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் கிராஃபைட் என்றொரு கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. அதில் தான் தற்போது டிவிஎஸ் இந்த 125சிசி ஸ்கூட்டரை தயாரித்து வருகிறது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

அப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஸ்கூட்டர் தற்போது மங்களூரில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. அதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Recommended Video - Watch Now!
Shocking Car Accident That Happened In Karunagappally, Kerala
கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

தற்போது வெளியான இந்த வீடியோவில் தயாரிப்பு நிலையில் உள்ள ஸ்கூட்டருக்கான வெர்ஷன் தான் இடம்பெற்றுள்ளது. விரைவில் இது பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

Trending On Drivespark:

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

2018ல் இந்திய வகானத்துறையை புதியதாக ஆக்கிரமிக்கவுள்ள டாப் 5 நிறுவனங்கள் இவைதான்..!!

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

இந்த ஸ்பை புகைப்படங்கள் மூலம் டிவிஎஸ் 125சிசி ஸ்கூட்டர் பல உயர் தர ப்ரீமியம் தர அம்சங்களை பெற்றிருப்பது நமக்கு தெரிய வருகிறது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

கிராஃபைட் கான்செப்ட் ஸ்கூட்டரின் வடிவமைப்பு ஸ்போர்டி உடன் கூடிய முகப்பு விளக்குகளை முன்பக்க ஏப்ரனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்தளவிலான வடிவமைப்பு 100சிசி முதல் 110சிசி ஸ்கூட்டர்களில் அதிகம் காணலாம்.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

எல்.இ.டி தரம்பெற்ற பகல் நேர எரியும் விளக்குகள், டெயில் விளக்குகள், 12 இஞ்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் முன்பக்க சக்கரத்தில் பெடல் டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

டிவிஎஸ் 125சிசி ஸ்கூட்டரில் வேகம், ஓடோமீட்டர், எரிவாயு கொள்ளவு, எரிவாயு திறன், சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற அம்சங்களை காட்டும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

ஸ்கூட்டரின் பின்பகுதியில் டூயல் ஃபிளோட்டிங் கிராப் ரெயில்கள் உள்ளன. இதை நாம் பார்க்கும் போது, ஸ்கூட்டரின் பின்பக்கம் சற்று பெரியதாக தெரிகிறது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

ப்ரீமியம் தர ஸ்விட்ச்கியர், எரிவாயு டேங்கிற்கான அமைப்பு, எஞ்சினை அணைக்கும் பொத்தான் மற்றும் சில அலுமினிய பிடிமானங்கள் ஆகிய கட்டுமானங்கள் இதில் உள்ளன.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. பின்சக்கரத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸ்பர் இடம்பெற்றிருக்கிறது.

டிவிஎஸின் இந்த புதிய ஸ்கூட்டர் 125சிசி திறனுடன் இருந்தாலும், இதனுடைய எஞ்சின் குறித்த மேலும் பல விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

இதற்கிடையே வரும் பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் கிராஃபைட் கான்செப்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் 150சிசி திறனில் வெளியிட்டு எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி இந்த புத்தம் புதிய ஸ்கூட்டர் ஹோண்டா கிராஸியா மற்றும் சுஸுகி ஆக்சஸிற்கு போட்டியாக உள்ளது.

ஒருவேளை 150சிசி திறனில் வெளியானால் அப்போது ஆப்ரிலியா எஸ்.ஆர் 150 மாடலுக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

இந்தியாவில் ப்ரீமியம் தர ஸ்கூட்டர் செக்மென்டில் ஏற்கனவே டிவிஎஸ் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. அதை மேலும் வலிமையாக்க வெளிவரும் மாடல் தான் இந்த கிராஃபைட் கான்செப்ட் ஸ்கூட்டர்.

Trending On Drivespark:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது!

110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..!!

கிராஃபைட் கான்செப்டில் டிவிஎஸின் புதிய ஸ்கூட்டர்: ஸ்பை படம்

125சிசி திறனில் பல்வேறு முக்கிய அம்சங்களுடன், மோட்டார் பைக்குகளுகே சவால் விடும் தன்மையுடன் உள்ள இந்த ஸ்கூட்டர் நிச்சயம் டிவிஎஸ் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும்.

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS 125cc Graphite Scooter Spotted Testing In India Again. Click for Details...
Story first published: Wednesday, January 3, 2018, 12:00 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark