டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

Written By:
Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனத்திற்கு சிறந்த மாற்று தேர்வாக டிவிஎஸ் மாடல்கள் இருக்கின்றன. மேலும், ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட டிவிஎஸ் ஜுபிடர் 110சிசி ஸ்கூட்டர் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

இந்த நிலையில், 125 சிசி மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதன்மை வகிக்கிறது. மேலும், இளைய வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், கடந்த நவம்பர் மாதம் க்ரேஸியா என்ற அடுத்த 125சிசி மாடலையும் ஹோண்டா களமிறக்கியது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், 125சிசி மார்க்கெட்டில் ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக புத்தம் புதிய ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

வரும் 5ந் தேதி புதிய இருசக்கர வாகன மாடலை சென்னையில் வைத்து அறிமுகம் செய்ய இருப்பதையும், ஸ்கூட்டரின் டெயில் லைட் பகுதியையும் வைத்து ஒரு வீடியோ டீசரை இரு தினங்களுக்கு முன் டிவிஎஸ் வெளியிட்டது. அத்துடன், எமக்கு அழைப்பும் வந்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

அந்த மாடல், புதிய 125சிசி ஸ்கூட்டர்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் க்ராஃபைட் என்ற 125சிசி ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

இந்த ஸ்கூட்டர் கான்செப்ட்தான் தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை க்ராஃபைட் என்று குறிப்பிடப்பட்ட இந்த புதிய ஸ்கூட்டர் என்டார்க் [NTorq] என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

வரும் பிப்ரவரி 5ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் "டி"வடிவிலான எல்இடி டெயில் லைட்டும், அலாதியான புகைப்போக்கி சப்தமும் ஆவலைத் தூண்டியது. புகைப்போக்கி சப்தம் மூலமாக இந்த ஸ்கூட்டர் செயல்திறனில் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

இந்த புதிய ஸ்கூட்டர் அதிகபட்சமாக 11.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது ரகசியமாக படம் எடுக்கப்பட்டு இணையதளங்களில் வெளியாகி வந்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

இதுவும் இளைய சமுதாயத்தினரை கவரும் அம்சங்களை பெற்றிருக்கும். இந்த புதிய ஸ்கூட்டரில் வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் மூடி பகுதி, அலுமினிய ஃபுட்பெக்குகள் மற்றும் ஸ்போர்ட்டியான க்ராப் ரெயில் கொடுக்கப்பட்டு இருக்கும். அத்துடன், பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல்களும் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கும்.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டரின் நாமகரணம் விபரம் கசிந்தது!

கான்செப்ட் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்ட் வசதி, க்ளிப் ஆன் ஹேண்டில்பார், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இருந்தன. இவை தயாரிப்பு நிலை மாடலாக வரும் என்டார்க் ஸ்கூட்டரிலும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் மிகச் சிறப்பான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா க்ரேஸியா, சுஸுகி ஆக்செஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Now, as per Bikewale, the new TVS 125cc scooter might be named as TVS Ntorq 125.
Story first published: Sunday, January 28, 2018, 15:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark