டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

Written By:

இளைஞர்கள் மத்தியில் விருப்பமான டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கில் புதிதாக ரேஸ் எடிசன் என்ற விசேஷ பதிப்பு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி வரிசை மாடல்கள் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. இந்த செக்மென்ட்டில் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், அப்பாச்சி 160 வி2 பைக்கின் விசேஷ பதிப்பு மாடலை டிவிஎஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி 160 வி2 பைக்கின் மேட் ரெட் எடிசன் போலவே, புதிய வண்ணக் கலவையில் இந்த புதிய பைக் வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் மாடல் விசேஷமான வெள்ளை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். வெள்ளை வண்ணத்தில் சிவப்பு வண்ண பாடி கிராஃபிக்ஸ் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

அப்பாச்சி 200 மற்றும் ஆர்ஆ310 பைக்குகளில் இருப்பது போன்று, இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கில் புதிய முப்பரிமான லட்சினை பொருத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

இந்த பைக்கின் புதிய வண்ணத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் 159.7சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 15.12 பிஎஸ் பவரையும், 13.03 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 ரேஸ் எடிசன் மாடலின் சிங்கிள் டிஸ்க் மாடல் ரூ.79,715 எக்ஸ்ஷோரூம் விலையிலும், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் ரூ.82,044 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் அறிமுகம்: விபரம்!!

பஜாஜ் பல்சர் என்எஸ் 160, சுஸுகி ஜிக்ஸெர், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் யமஹா எஃப்இசட் வி2 ஆகிய பைக் மாடல்களுக்கு இந்த புதிய அப்பாச்சி 160 வி2 பைக்கின் ரேஸ் எடிசன் மாடல் நெருக்கடியை தரும்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache 160 V2 Race Edition Launched In India.
Story first published: Thursday, April 12, 2018, 17:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark