டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பதிப்பில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் ரேஸ் எடிசனில் புதிய வண்ணத்திலும், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சாதாரண மாடலிலிருந்து இந்த ரேஸ் எடிசன் மாடல் வெகுவாக வேறுபடுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

அடுத்து, புதிய டிவிஎஸ் அப்பாச்சி ரேஸ் எடிசன் மாடலில் ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க்[AR-T] ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இந்த புதிய க்ளட்ச் தொழில்நுட்பம் மூலமாக டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் செயல்திறன் மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஏஆர்டி ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பத்தின் மூலமாக கியர் மாற்றம் மிக மிக விரைவாகவும், 22 சதவீதம் உராய்வு குறைவாக இருக்கும். இதனால், பந்தய களங்களில் ஒரு சுற்றை மிக விரைவாக கடக்கும் திறனை பெறுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மிக விரைவாக கியரை கூட்டுவதற்கு பயன்படுவது போன்றே, கியரை குறைக்கும்போது பைக்கின் நிலைத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால், சிறந்த பாதுகாப்பு விஷயமாகவும் இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ரேஸ் பைக் மாடல்களில் பயன்படுத்தப்படும் இந்த ஏஆர்டி ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பத்தை அப்பாச்சி 200 பைக்கில் டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் பைக் மாடல் என்ற பெருமையும் டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்கில் 197சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் எஞ்சின் மாடல் அ்திகபட்சமாக 20.5 பிஎஸ் பவரையும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் அதிகபட்சமாக 21.0 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சின் 18.1 என்எம் டார்க் திறனை வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்கின் ரேஸ் எடிசன் மாடல் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். கார்ப்புரேட்டர் எஞ்சின் மாடல் ரூ.95,185 எக்ஸ்ஷோரூம் விலையிலும், எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் ரூ.1,07,885 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்கின் கார்ப்புரேட்டர் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட ரேஸ் எடிசன் மாடலுக்கு ரூ.1,08,985 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

கார்ப்புரேட்டர் மாடல் நாடு முழுவதும் உள்ள அனைத்து டிவிஎஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும். ஆனால், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மற்றும் ஏபிஎஸ் மாடல்கள் குறிப்பிட்ட டிவிஎஸ் ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache 200 4V Race Edition with Slipper Clutch launched in India.
Story first published: Wednesday, March 7, 2018, 12:53 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark