டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

Written By:

கடந்த ஆண்டு டிசம்பரில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அருமையான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வந்த இந்த புதிய ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

ரூ.2.05 லட்சம் என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் வந்ததும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இந்த நிலையில், அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலையை ரூ.18,000 வரை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ்.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

தற்போது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலை ரூ.2.23 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

எனினும், அறிமுகம் செய்யப்படும்போதே, இது அறிமுகச் சலுகை விலை, நிதி ஆண்டு துவக்கத்தில் விலை ஏற்றப்படும் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. அதுபோலவே, இப்போது சத்தமில்லாமல் விலையை ஏற்றி இருக்கிறது டிவிஎஸ்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் டெலிவிரி கடந்த ஜனவரியில் துவங்கியது. எனினும், தொடர்ந்து காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக்கிற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த டிசைன் பிரிவால் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் 313சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34பிஎச்பி பவரையு், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 163கிமீ வேகம் வரை தொடும் திறன் பெற்றிருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

இந்த பைக்கில் பை- எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் முன்சக்கரத்தில் 300மிமீ கயபா டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று முன்புறத்தில் கயபா அப்சைடு ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

கேடிஎம் ஆர்சி390, பெனெல்லி 302ஆர் மற்றும் பஜாஜ் டோமினார் 400 ஆகிய பைக்குகளுடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் போட்டி போடுகிறது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS has increased the prices of the Apache RR310 motorcycle across the country. The RR310 was launched in December 2017, with an initial price of Rs 2.05 Lakh ex-showroom (Delhi). The company has now increased the prices by Rs 18,000, bringing the new price to Rs 2.23 Lakh ex-showroom (Delhi). The change in prices has already been updated on the company's official website.
Story first published: Wednesday, April 4, 2018, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark