டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

முற்றிலும் புதிய வடிவமைப்புக்கு மாறி இருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் சென்னையில் நடந்து வரும் நிகழ்ச்சியில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக் வாடிக்கையாளர்களிடத்தில் சிறந்த வரவேற்பை பெற்ற ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், அப்பாச்சி வரிசையில் சக்திவாய்ந்த மாடல்களை தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி வந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த நிலையில், அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் தற்போது முற்றிலும் புதிய பைக் மாடலாக மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் புதிய சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய சஸ்பென்ஷன் அமைப்பும் இந்த பைக்கின் முக்கிய அம்சம். இந்த பைக்கின் எஞ்சினிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஷோவா மோனோஷாக் அப்சார்பர் இடம்பிடித்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் முன்சக்கரத்தில் 270மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் மாடலில் பின்சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இருக்கிிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

அப்பாச்சி 200 4வி பைக் போன்றே, டபுள் பேரல் சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. பின்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் ஆப்ஷன் உள்ளது. அத்துடன், சாதாரண சாலைகளுக்கும், ஆஃப்ரோடுகளுக்குமான இரண்டு டயர் ஆப்ஷன்களும் கிடைக்க்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் 4 வால்வு சிஸ்டம் கொண்ட 159சிசி ஆயில்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 14.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல் 16.2 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளிலும், கார்புரேட்டர் மாடல் 4.73 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 114 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இதன் 4 வால்வு சிஸ்டம் நுட்பம் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக நிலைநிறுத்துகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். கார்புரேட்டர் எஞ்சின் மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொண்ட மாடல் ரூ.81,490 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

கார்புரேட்டர் எஞ்சின் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.84,490 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.89,990 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கிற்கான டெலிவிரி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரகத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்160, சுஸுகி ஜிக்ஸெர், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் யமஹா எஃப்இசட் எஸ் எஃப்ஐ பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RTR 160 4V Bike Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X