டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

Written By:

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதனுடன் மற்றொரு முக்கிய பாதுகாப்பு வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் இருக்கிறது. இருப்பினும், ஏபிஎஸ் உள்ளிட்ட சில பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறையாக இருந்து வந்தது.

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

இந்த குறையை போக்கும் விதத்தில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரியர் வீல் லிஃப்ட்- ஆஃப் புரொடெக்ஷன் என்ற இரு முக்கிய பாதுகாப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

01. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்:

01. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்:

டியூவல் சேனல் ஏபிஎஸ் என்பது இரண்டு சக்கரங்களும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நுட்பத்தில் இயங்கும். இதனால், மிக குறுகிய தூரத்தில் பைக்கை நிலையாக நிறுத்துவதற்கு உதவும். இது டிவிஎஸ் நிறுவனமே சொந்தமாக உருவாக்கி இருக்கும் ஏபிஎஸ் சிஸ்டம் என்பதும் மற்றொரு சிறப்பு.

02. ரியர் வீல் லிஃப்ட் ஆஃப் புரொடெக்ஷன்:

02. ரியர் வீல் லிஃப்ட் ஆஃப் புரொடெக்ஷன்:

அதிவேகத்தில் பைக் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பிரேக் பிடிக்கும்போது பின்புற வீல்கள் மேலே தூக்குவதற்கான வாய்ப்புண்டு. இதனை தவிர்ப்பதற்காக விசேஷ சென்சார்கள் உதவியுடன் பைக்கை மேலே தூக்காமல் நிலையாக செல்வதற்கு ரியர் வீல் லிஃப்ட் ஆஃப் புரொடெக்ஷன் உதவும்.

விசேஷ சென்சார்கள்:

விசேஷ சென்சார்கள்:

இதற்காக பைக்கின் நகர்வை உணர்ந்து பைக்கின் பின்சக்கரம் தரையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கான கைரோ சென்சார் மற்றும் ஃப்ரீ ஸ்பின் சென்சார் உதவியுடன் இயங்குகிறது.

செயல்படும் விதம்:

செயல்படும் விதம்:

பின்புற வீல் மேலே தூக்குவது கைரோ சென்சார் மூலமாக தெரிந்தால், உடனடியாக முன்சக்கரத்திற்கு செலுத்தப்படும் பிரேக் ஆற்றல் சற்றே குறைக்கப்படும். இதனால், மேலே தூக்கும் பின்புற வீல் உடனடியாக தரைக்கு வந்துவிடும். மேலும், அபாயகரமான சூழலில் பைக்கை ஓட்டுபவர் நிலைகுலையாமல் இருப்பதையும் இந்த தொழில்நுட்பம் உறுதி செய்கிறது.

சிறந்த பாதுகாப்பு:

சிறந்த பாதுகாப்பு:

இந்த இரு பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கிற்கு வலு சேர்க்கும் என்று கூறலாம். ஏனெனில், எந்தவொரு சூழலிலும் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்கு இந்த பிரேக் தொழில்நுட்பங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

எஞ்சின்:

எஞ்சின்:

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 197.75சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்:

செயல்திறன்:

இந்த பைக் மணிக்கு 128 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்த. 0 - 60 கிமீ வேகத்தை 3.95 வினாடிகளில் எட்டிவிடும்.

வேறுபாடு:

வேறுபாடு:

சாதாரண மாடலிலிருந்து இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலை வேறுபடுத்தும் விதத்தில், முன்புற மட்கார்டில் ஏபிஎஸ் வாசகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடல் ரூ.1,07,485 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

போட்டியாளர்கள்:

போட்டியாளர்கள்:

இதன் நேர் போட்டியாளர்களானபஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக்கும், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கிலும் சிங்கிள் சேனல், இருக்கும் நிலையில், அப்பாச்சி 200சிசி மாடல் டியூவல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

 மாடல் விபரம்:

மாடல் விபரம்:

ஏபிஎஸ் மாடல் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் கார்புரேட்டர் எஞ்சின் மாடலில் மட்டுமே வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என இரண்டு தொழில்நுட்பங்களையும் வழங்கினால் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய சூழலை தவிர்த்துள்ளது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company has launched the Apache RTR 200 4V with ABS. The carburettor variant of the premium motorcycle will now feature a first-in-segment Dual-Channel Anti-lock Braking System (ABS). The TVS Apache RTR 200 4V ABS is priced at Rs 1.07 lakh ex-showroom (Delhi).
Story first published: Saturday, February 3, 2018, 14:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark